திமுக வேட்பாளர் பட்டியலில் உதயநிதி வியூகம்… இளைஞர்களுக்கு அதிக சீட்- 2026 தேர்தலில் புதிய பாய்ச்சல்! – how udhayanidhi stalin stragedy works with dmk candidates list 2026 assembly election

சமீபத்தில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வகுத்த வியூகங்கள் எந்த அளவிற்கு கைகொடுத்துள்ளன என்று விரிவாக பார்க்கலாம். இம்முறை புதியவர்கள் பலருக்கு வாய்ப்பளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Udhayanidhi Stalin DMK Strategy for 2026 Election(புகைப்படங்கள்Samayam Tamil)
2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் திமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திமுக மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கியமான கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

அதாவது, திமுக இளைஞரணியை சேர்ந்தவர்கள், இளைஞர்கள், புதியவர்களுக்கு சீட் வேண்டும் என்றார். இதில் எந்த அளவிற்கு வெற்றி கண்டுள்ளார் என்று வேட்பாளர் பட்டியலை பலரும் அலசி ஆராய்ந்து வருகின்றனர். மொத்தம் 164 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. அதில்,

விஜய் போட்ட உத்தரவு…சரியான திசையில் நகர்வு!

உதயநிதி ஸ்டாலின் வகுத்த வியூகம்
  • தி.நகர் சட்டமன்றத் தொகுதியானது மறைந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் மகன் ராஜாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. வடசென்னையில் ஜெ.அன்பழகன் மிகுந்த செல்வாக்கு பெற்ற நபராக விளங்கினார். அவரது மறைவு திமுகவிற்கு பெரிய இழப்பாக பார்க்கப்பட்டது. தி.நகரில் புதிதாக கட்டப்பட்ட பாலத்திற்கு இவரது பெயரை தான் வைத்துள்ளனர்.
  • அண்ணா நகர் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர் சிற்றரசுவிற்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த முறை எம்.கே.மோகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 2 முறை போட்டியிட்டு வென்றிருந்தார். இம்முறை சீட் மறுக்கப்பட்டுள்ளது.
  • ராயபுரம் தொகுதியில் சுபேர் கான் முதல்முறை போட்டியிடுகிறார். இவர் சிறுபான்மையினர் அணியை சேர்ந்தவர். இந்த தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம். எனவே சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைத்து வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுகிறார்.

பரந்தாமனுக்கு சீட் இல்லை
  • எழும்பூர் தனி தொகுதியில் தமிழன் பிரசன்னாவிற்கு சீட் கிடைத்துள்ளது. இவர் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்பவர். ஊடகங்களில் பெரிதும் அறியப்பட்ட முகமாக இருப்பவர். திமுகவில் தீவிர உழைப்பை செலுத்தி வருபவர். நீண்ட காலமாக சீட் எதிர்பார்த்த நிலையில் 2026 தேர்தலில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கு சிட்டிங் எம்.எல்.ஏ பரந்தாமனுக்கு சீட் இல்லை.
  • வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். எனவே இதுவும் ஸ்டார் தொகுதியாக பார்க்கப்படுகிறது. இங்கு திமுக சார்பில் கார்த்திக் மோகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • அண்ணா நகரில் இருந்து கடைசி நேரத்தில் இந்த தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். கார்த்திக் மோகனை பொறுத்தவரை திமுக குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது. ஆதவ் அர்ஜுனாவை வீழ்த்த அக்கட்சி தலைமை வகுத்த வியூகமாக கார்த்தி மோகன் இருக்கலாம் என்கின்றனர்.

விஜய்க்கு எதிராக சிட்டிங் எம்.எல்.ஏ ஆர்.டி.சேகர் போட்டி
  • பெரம்பூர் தொகுதி தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். இங்கு திமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏ ஆர்.டி.சேகருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சீட் மறுக்கப்பட்ட மூன்று திமுக அமைச்சர்கள்

ராணிப்பேட்டை தொகுதியில் திமுக அமைச்சர் காந்திக்கு சீட் இல்லை. அவரது மகன் வினோத் காந்திக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் ஆகியோருக்கும் சீட் இல்லை. 4 இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு திமுக தலைமை சீட் கொடுத்துள்ளது. ஒருபுறம் இளைஞர்கள், மறுபுறம் மூத்தவர்கள், அனுபவசாலிகள் என கலவையாக சீட் வழங்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. இதை வைத்து பார்க்கும் போது உதயநிதி ஸ்டாலினின் வியூகம் எடுப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.