அகமதாபாத்,
குஜராத் மாநிலத்தின் காந்திநகர் மாவட்டத்தில் அடலாஜ் பகுதியில் உள்ள ஸ்ரீமதி மானெக்பா வினய் விஹார் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த கல்வி நிறுவனத்தின் விடுதியில் 250 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
சுமார் 250 மாணவர்களுக்கு மற்றும் மற்றும் 15 ஆசிரியர்களின் குடும்பத்திற்கு தினமும் இருமுறை உணவு சமைக்கப்படுகிறது. இதனால் தினமும் உணவு சமைக்க அதிகப்படியான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தேவைப்படும்.
ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரமடைந்ததால், இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர்களின் விலை உயர்ந்ததுடன் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இந்த கடினமான சூழ்நிலையில், கல்வி நிறுவனம் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய
இங்குள்ள 220 பசுக்களின் சாணம் மற்றும் சமையலறை கழிவுகளை பயன்படுத்தி இரண்டு உயிரிவாயு ஆலைகளின் மூலம் தினமும் 90 கன மீட்டர் எரிவாயுவை உற்பத்தி செய்து அதன் மூலம் தனது எரிசக்தி தேவையை பூர்த்தி செய்து கொண்டுள்ளது.
இந்த எரிவாயுவினை பயன்படுத்தி இங்குள்ள 250 மாணவிகள் மற்றும் 15 குடும்பங்களின் தினசரி சமையல் தேவைக்கு உதவுவதுடன், மாதத்திற்கு 30 சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் பயன்பாட்டை குறைத்துள்ளது.
என பள்ளி மேலாளர் ராகுல் படேல் கூறினார்.
கடந்த 5 ஆண்டுகாலத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 193 உயிரிவாயு ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன.
மேலும் இந்த ஆலைகளின் ஒட்டுமொத்த தினசரி உற்பத்தித் திறன் 13,955 கன மீட்டர் ஆகும். 2026-27 நிதியாண்டிற்காக இத்திட்டத்திற்காக குஜராத் அரசு ரூ. 12 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. மேலும்
சுமார் 60 புதிய உயிரிவாயு ஆலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
