சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் நடவடிக்கையை துரிதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று அறிவித்தார். இதில் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளார்.
இதையடுத்து, தவெக தலைவர் விஜய் நாளை முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை 5 தொகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
பெரம்பூர் – பெரம்பூர் தொகுதி (பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை)
திரு விக நகர் – திரு விக நகர் தொகுதி (3 மணி முதல் 4 மணி வரை)
பெரவள்ளூர் – கொளத்தூர் தொகுதி (மாலை 5 மணி முதல் 6 மணி வரை)
திருமங்கலம் – அண்ணாநகர் தொகுதி (மாலை 6 மணி முதல் 7 மணி வரை)
சிட்கோ நகர் – வில்லிவாக்கம் தொகுதி (இரவு 7 மணி முதல் 8 மணி வரை)
அயனாவரம் – திரு விக நகர் தொகுதி (இரவு 8 மணி முதல் 10 மணி வரை)
