பெங்களூரு ,
நேற்று நடைபெற்ற 19-வதி ஐபிஎல் சீசனின் தொடக்கப் போட்டியில் பெங்களூரு அணி, ஐதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.
இந்த நிலையில் வெற்றி தொடர்பாக பேசிய பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் கூறியதாவது,
வீரர்கள் விளையாடிய விதமும், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்ட விதமும் ஒரு நேர்மறையான விஷயம். முதலாவதாக, இது எங்களுக்கு இந்த சீசனின் முதல் போட்டி. அனைவரும் ஒன்றிணைந்து அணிக்காகச் செயல்பட்ட விதம், எங்களுக்கு மிகவும் சிறப்பானஅறிகுறி . ஜேக்கப் டபி சிறப்பாக பந்துவீசினார்.
பேட்டிங் செய்வதற்கு விக்கெட் நன்றாக இருந்தது. விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் தங்களது இன்னிங்ஸை விளையாடிய விதம், பேட்ஸ்மேன்களுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தது என்று நான் நினைக்கிறேன். எனவே நாங்கள் அதைத் தொடர்ந்து செய்வோம்.என தெரிவித்தார்.
