தமிழகமே எதிர்பார்த்த திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை வெளியிட்டார்.
தயாரிப்பு குழுவுக்கு கௌரவம்
தேர்தல் அறிக்கை தயாரிப்பில் பங்காற்றிய குழு உறுப்பினர்களுக்கு, முதலமைச்சர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். கட்சிக்காக உழைத்தவர்களை பாராட்டும் விதமாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
ஸ்டாலின் உரை – நம்பிக்கை & இலக்கு
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், “தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளோம்” என்று கூறியதுடன், “7ஆவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்” என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
தேர்தல் அறிவிப்புகள் என்ன?
- மகளிர் உரிமைத்தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
- புதுமைப் பெண் திட்டத்தில் பயன்பெறுவோருக்கு இனி 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
- முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் 8ம் வகுப்பு வரை நீட்டிப்பு
- 18 லட்சம் கோடி அந்நிய முதலீடுஈர்க்கப்பட்டு அதன் மூலம்50 லட்சம் இளைஞர்களுக்குவேலைவாய்ப்பு உருவாக்கப்படும்
- 5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்
- பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5-ஆக உயர்த்தப்படும்
- சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
- 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்புசெட் வழங்கப்படும்
- “உயர்கல்வி மாணவர்கள் 35 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கப்படும்” -திமுக வாக்குறுதி
- 5,000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்படும்
- நெல்கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 ஆகவும், கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
