Cm Stalin About Dmk Manifesto,திமுகவின் தேர்தல் அறிக்கை சூப்பர்ஸ்டாரா களமிறங்கியிருக்கு..இது வெறும் ஹைலைட்ஸ் தான் : முதலமைச்சர் முக ஸ்டாலின் – cm mk stalin about dmk manifesto and huge praise on kanimozhi

திமுகவின் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டார். கனிமொழி தலைமையிலான குழு தயார் செய்த தேர்தல் அறிக்கையை தற்போது முதல்வர் முக ஸ்டாலின் அதிகாரபூர்வமாக தெரிவித்தார்

முக்கிய அம்சங்கள்:

திமுக தேர்தல் அறிக்கை

முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியீடு

mk stalin speech about dmk manifesto
திமுகவின் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு அந்த அறிக்கையை தயார் செய்த கழக இணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையிலான குழுவை பாராட்டினார் முக ஸ்டாலின். அதனைத்தொடர்ந்து திமுகவின் தேர்தல் அறிக்கைகளை ஒவ்வொன்றாக அறிவித்தார். அந்த தேர்தல் அறிக்கைகளில் மகளிருக்கான அறிக்கைகள் நிரம்பி இருந்தன. பள்ளி படிக்கும் மாணவ மாணவியர்கள், பெண்கள், இல்லத்தரசிகள் என அனைவருக்கும் பயன்படும் வகையில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு இருப்பதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியிருக்கின்றோம் என பெருமையுடன் கூறி தேர்தல் அறிக்கையை வாசிக்க துவங்கினார் முதல்வர். இந்நிலையில் தேர்தல் அறிக்கைகளை எல்லாம் வெளியிட்ட பிறகு முதலமைச்சர், இது வெறும் ஹைலைட்ஸ் மட்டும் தான். எப்போதும் தேர்தல் களத்தில் திமுகவின் அறிக்கைகள் தான் ஹீரோ.தற்போது இந்த தேர்தலுக்கான அறிக்கைகள் சூப்பர்ஸ்டாரா களமிறங்கி இருக்கு.
திராவிட மாடல் 2 .0 ஆட்சி தமிழகத்தில் அமையும். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்றார் முதல்வர் ஸ்டாலின். இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், ஏற்கனவே நிதிநெருக்கடியில் இருந்தபோதும் கூட மகளிர் உரிமைத்தொகை, ஓய்வு ஊதிய திட்டம் போன்றவற்றை கூறினோம். இதெல்லாம் சாத்தியமில்லை என சொன்னார்கள், இருந்தாலும் நிறைவேற்றினோம். தற்போதும் நிறைவேற்றுவோம்.
சொன்ன திட்டங்களை தவிர்த்து சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றி காட்டியிருக்கின்றோம். பொருளாதார வளர்ச்சியில் முதல் மாநிலம் என்ற பெயரை நாம் எடுத்துள்ளோம். கல்லூரி மாணவர்களுக்கு ஆயிரம் ருபாய், காலை உணவு திட்டம் போன்ற சொல்லாத பல திட்டங்களை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். சொல்லாத திட்டங்களை நிறைவேற்றும் நாங்கள் சொல்லும் திட்டங்களையும் நிறைவேற்றி வருகின்றோம் என்றார் முதல்வர் முக ஸ்டாலின்.
இந்நிலையில் தற்போது திமுகவின் தேர்தல் அறிக்கையை அலசி ஆராய்ந்து வருகின்றனர். இந்த தேர்தல் அறிக்கையில் புதிதாக சில திட்டங்களை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். குறிப்பாக இல்லத்தரசி என்ற புதிய திட்டதை வழங்கியுள்ளார் முக ஸ்டாலின். இல்லத்தரசி திட்டத்தின் கீழ் ருபாய் 8000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என அறிவித்தார் முக ஸ்டாலின், மேலும் நினைத்ததை போல மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
ஏற்கனவே 1000 ரூபாயாக இருந்தது தற்போது 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு திமுகவின் தேர்தல் அறிக்கை முதல்வர் சொன்னதை போல தலைப்பு செய்தியாக உருவெடுத்திருக்கிறது. இந்நிலையில் ஒருபக்கம் திமுகதேர்தல் அறிக்கைக்கு ஆதரவு கிடைத்து வருகின்றது. ஆனால் அதே சமயம் திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்தான விமர்சனங்களும் போய்க்கொண்டு இருக்கின்றன.
எதிர்க்கட்சிகள் கண்டிப்பாக திமுக தேர்தல் அறிக்கை யை விமர்சனம் செய்வார்கள் என்றே தெரிகின்றது. ஆனால் திமுக தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்கள் என்ன சொல்கின்றனர், அவர்களின் கருத்து என்ன ? என்பது தான் மிக முக்கியம். பொதுமக்கள் திமுகவின் தேர்தல் அறிக்கையை ஆதரித்தால் கண்டிப்பாக அவர்களின் வெற்றி உறுதியாகும். ஏற்கனவே திமுகவினரும் முதலமைச்சர் முக ஸ்டாலினும் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு மிகப்பெரிய நம்பிக்கையில் இருக்கின்றனர்.

DMK தேர்தல் அறிக்கை: Kanimozhi முதல்வரை சந்தித்த பிறகு வழங்கிய முக்கிய அப்டேட்

ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு வெளியிட்ட பெரும்பாலான திட்டங்களை நிறைவேற்றி இருப்பதாக திமுகவினர் சொல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சொல்லாத பல திட்டங்களையும் திமுக நிறைவேற்றி இருப்பதாக முதல்வர் பெருமிதம் கொள்கின்றார். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து என்ன சொல்கின்றனர் என்ற கருத்துக்கள் தான் அவர்களின் வெற்றியை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.