Vanathi Srinivasan About Annamalai,யாருக்கு எந்த பொறுப்பு கொடுக்க வேண்டும் என பாஜக தலைமைக்கு தெரியும் : வானதி சீனிவாசன் – vanathi srinivasan about why annamalai boycott meeting with modi in coimbatore

பிரதமர் மோடி கோவைக்கு வருகை தந்துள்ளார். அவரை வரவேற்க பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் விமான நிலையத்திற்கு வருகை தந்த நிலையில் அண்ணாமலை மட்டும் கோவையில் இருந்துகொண்டே வரவில்லை. இதுகுறித்து வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார்

முக்கிய அம்சங்கள்:

மோடியின் வரவேற்க வராத அண்ணாமலை

வானதி சீனிவாசன் விளக்கம்

vanathi srinivasan about annamalai
தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதில் கேரளா மாநிலத்தில் நடைபெறும் தேர்தலுக்கான பாஜகவின் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்ள கேரளா சென்றுள்ளார் பிரதமர் மோடி. கோவை வழியாக கேரளா சென்ற பிரதமர் மோடியை கோவை விமான நிலையத்தில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உட்பட பலர் கோவை விமான நிலையம் வந்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு கொடுத்தார்கள். ஆனால் அண்ணாமலை கோவையில் இருந்துகொண்டே மோடியை வரவேற்க விமான நிலையத்திற்கு வருகை தரவில்லை என சொல்லப்படுகின்றது. இது தற்போது மேலும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
சமீபகாலமாகவே பாஜக மீது அண்ணாமலைஅதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகினார். அதைத்தொடர்ந்து கட்சியில் இருந்து அவர் புறக்கணிக்கப்படுகின்றாரோ ? என்றெல்லாம் வதந்திகள் பரவின. அண்ணாமலை ஆதரவாளர்கள் எல்லாம், அண்ணாமலையின் அன்பு கூட்டம் என போஸ்டர் ஒட்டி வருகின்றனர். மேலும் இம்முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
குறிப்பாக மோடியை வரவேற்க அவர் ஏன் வரவில்லை ? என்பது தற்போது பேசும்பொருளாகி உள்ளது. தற்போது இதுகுறித்து வானதி சீனிவாசன் தன் கருத்தினை கூறியுள்ளார்.அவர் பேசியது, நான் இங்கு வந்ததும் அண்ணாமலையை தான் முதலில் கேட்டேன். இங்கு இருப்பவர்கள், லிஸ்டில் அவரின் பெயரை குறிப்பிட்டு தான் அனுப்பினோம். வரவேற்பாளர்களின் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இருந்தது. ஆனால் அவர் தான் வரவில்லை என்றனர்.
அவர் ஏன் வரவில்லை என தெரியவில்லை. தம்பியிடம் நான் விசாரிக்கின்றேன் என்றார் வானதி சீனிவாசன். மேலும் இன்னும் பாஜக தங்களது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அதற்குள் இவருக்கு சீட் இல்லை, அவருக்கு சீட் இல்லை என பேச வேண்டாம். பாஜக கட்டுக்கோப்பான ஒரு கட்சி. அந்த கட்சியின் தலைமைக்கு யாருக்கு எப்போது பதவியும் பொறுப்பும் கொடுக்க வேண்டும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். கட்சியில் இருப்பவர்களுக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும்.
ஆனால் கட்சியின் தலைமை பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து தான் பதவி கொடுக்க முடியும். அதனை மிகச்சரியாக பாஜக தலைமை செய்வார்கள் என்றார் வானதி சீனிவாசன். இந்நிலையில் வானதி சீனிவாசன் கூறுவதை பார்த்தால், அண்ணாமலைக்கு கட்சியின் மீது அதிருப்தி இருப்பதை போல தெரிவதாக தான் மக்கள் பேசுகின்றனர். வரவேற்பாளர்கள் பட்டியலில் பெயர் இருந்தும் அண்ணாமலை ஏன் வரவில்லை ? அதுவும் பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்ச்சியையே அண்ணாமலை புறக்கணித்துள்ளார் என்றால் அதற்கு என்ன காரணமாக இருக்கும் ? என்பது போன்ற பல யூகங்களும் கணிப்புகளும் உலா வர துவங்கியுள்ளன.

விஜய் கட்சிக்கும் பாஜகவுக்கும் செட் ஆகாது – அண்ணாமலை…!

இதையும் தாண்டி இம்முறை அண்ணாமலைக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படுமா ? அப்படி சீட் வழங்கப்படவில்லை என்றால் அண்ணாமலையின் முடிவு என்னவாக இருக்கும் ? என பல கேள்விகள் போய்க்கொண்டு தான் இருக்கின்றது. இதற்கெல்லாம் இன்னும் ஒரு சில நாட்களில் பதில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அண்ணாமலை பிரதமர் மோடியின் வரவேற்பையே புறக்கணித்து எதிர்ப்பு காட்டியிருக்கின்றார் என்றால் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாக மட்டும் உறுதியாக தெரிகின்றது.