2026 தேர்தலில் இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டி – செங்கோட்டையன் சொன்ன பதில்? – vijay to contest from two constituencies in the 2026 election – what did sengottaiyan say

தவெக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது இதில் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Vijay to contest from two constituencies in the 2026 election(புகைப்படங்கள்Samayam Tamil)
கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக 234 தொகுதிகளிலும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும்

தவெக தலைவர் உரையைக் கேட்கும் பொழுது நாடு வியக்கும் அளவிற்கு “புதிய மறுமலர்ச்சி உருவாக்கும் வகையில் உரை அமைந்திருந்தது” எனவும் அவர் பாராட்டியிருந்தார். தமிழகத்தில் நல்லாட்சி தருவதற்கு தூய்மையான ஆட்சி தருவதற்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக மட்டும் தான் முடியும் என தெரிவித்த அவர், பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கின்ற அரசாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்ற அரசாக தமிழக வெற்றிக்கழகம் இருக்கும் என்ற கருத்தை விஜய்பேசியிருக்கிறார் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில் ஆண்டு முடித்தவர்கள் மற்றும் ஆண்டு கொண்டு இருப்பவர்களை காட்டிலும் புதிய ஆட்சி வேண்டும் என்பது மக்களின் கனவாக இருக்கிறது என தெரிவித்த அவர், எதிர்கால தமிழகம் மற்றும் இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக இருப்பதற்கு அவரது உரை அமைந்துள்ளது எனவும் பாராட்டியிருக்கிறார். வருகின்ற 2026 ல் விஜய் ஆட்சியில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என தெரிவித்த அவர், மக்கள் சக்தி அவருக்கு பின்னால் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
இன்று வெளியிடப்பட்ட பட்ட வேட்பாளர் பட்டியலில் செங்கோட்டையன் கோபிச்செட்டி பாளையத்தில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பேசும்போது கோபியில் எட்டு முறை , சத்தியமங்கலத்தில் ஒரு முறை என ஒன்பது முறை வெற்றி பெற்றிருக்கிறேன் என தெரிவித்தார். தற்பொழுது தவெக சார்பில் கோபியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறேன், மக்கள் ஆதரவு இருக்கிறது, மக்களுக்கு செய்திருக்கின்ற பணியின் காரணமாகவும் , 40 ஆண்டுகள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் எனது பணிகள் இருந்துள்ளது எனவும் தெரிவித்தார். மக்கள் சக்தியை, மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம் எனவும் தெரிவித்தார்.
பொன்ராஜ் மீது இரு நாட்களுக்கு முன்னர் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது , அடுத்த நாள் காலையில் அவர் மன்னிப்பு கேட்டிருக்கின்றார் அதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, அதிமுக இயக்கத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டவன் நான் , சாதாரண உறுப்பினராக கூட இருக்கக் கூடாது என சரித்திர வரலாற்றில் இல்லாத அளவிற்கு தூக்கி எறியப்பட்டவன் . அதனால் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கின்றேன் எனவும், இங்கு இளைஞர்கள், பெண்கள் , படித்தவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் என வரவேற்றை பார்க்கும் பொழுது , அவரது சக்தி மிகப்பெரிய சக்தி ஆக இருக்கிறது . அதை நாடே அறியும் எனவும் தெரிவித்தார்.
தவெகவில் வேட்பாளர்கள் தேர்வுக்கு கஷ்டப்பட்டு உள்ளார்கள் என முன்னாள் அமைச்சர் வேலுமணி தெரிவித்து இருப்பது குறித்த கேள்விக்கு, நாளை காலம் மாறும். மக்கள் தீர்ப்பால் வேலுமணி என்ன கருதுகின்றாரோ அந்த கருத்துக்கள் அனைத்தும் தூள் தூளாக்கப்படும் எனவும் தெரிவித்தார். விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு,எல்லாத் தலைவர்களும் இரண்டு தொகுதியில் போட்டியிட்டுள்ளார்கள், ஜெயலலிதா உட்பட என தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.