திமுக தேர்தல் அறிக்கை 2026 : மத்திய அரசு திட்டங்களின் நகலா? தமிழிசை கடும் விமர்சனம்! – tamilisai soundararajan criticizes dmk election manifesto is merely an expansion of central govt schemes

திமுக தேர்தல் அறிக்கையில் இருப்பது அனைத்தும் மத்திய அரசின் திட்டங்களை விரிபடுத்தப்பட்டு உள்ளது என தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம்

tamilisai-vs-stakin.(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் வேகம் எடுத்து வருகிறது. அந்த வகையில், வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026

இதனால் தேர்தல் காலங்களில் குறிப்பிட்ட கட்சிகள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் கவனம் பெறும். எந்த கட்சி எந்த மாதிரியான அறிவிப்பினை வெளியிடுகிறார்கள் என்பதை வாக்காளர்கள் கவனத்தில் கொண்டு ஓட்டினை செலுத்துவார்கள். குறிப்பாக தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள் தான் கதாநாயகனாக பார்க்கப்படுவது வழக்கம். இந்த சூழலில் நாம் தமிழர் அதிமுகவை தொடர்ந்து திமுக தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அதில், 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.முதியோர் உதவி தொகை 1500 இல் இருந்து 2000 ரூபாயாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 1500 லிருந்து 2500 ரூபாயா உயர்த்தப்படும்.

திமுக தேர்தல் வாக்குறுதிகள்

மகளிர் உரிமை தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். புதுமைப்பெண் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்படி மாதம் தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் இனி 1500 ஆக உயர்த்தப்படும்.நெல் கொள்முதல் விலை குறைந்தால் ஒன்றுக்கு மூன்றாயிரம் ரூபாயாகவும் கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4,500 ஆகவும் வழங்கப்படும்.
பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்படும் மீன் பிடி தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை 8000 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும் மீன்பிடி குறைவு கால சிறப்பு நிவாரண தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். சுய உதவிக் குழு உறுப்பினராக இருக்கும் பெண்கள் தொழில் முனைவராக முன்னேறிடும் வகையில் பிணை ஏதுமின்றி 5 லட்சம் வரை மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படும்
மாவட்டங்கள் முதல் வட்டங்கள் வரியில் ஆன அரசு மருத்துவமனைகளில் தயாரிசஸ் சிகிச்சைக்காக கருவிகள் இரண்டு மடங்காக்கப்படும் என்று அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு திமுக வாக்காளர் மத்தியில் கவனம் பெற்றது. இந் த நிலையில் திமுக தேர்தல் அறிக்கையை பாஜக மூத்த தலைவர் தமிழிசை கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.

நெருக்கடியில் திமுக! கூட்டணி என்னாகும்?

தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம்

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது : திமுக தேர்தல் அறிக்கை என்பது கதாநாயகியும் கதாநாயகனும் இருக்கக்கூடிய நாடகம் தான். ஏனென்றால் ஏற்கனவே கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை இவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.
தற்பொழுது கதாநாயகன் கதாநாயகன் என்று ஒரு புதிய படத்தை ஆரம்பித்துள்ளார்கள். கடந்த தேர்தல் வாக்குறுதியில் நூறு ரூபாய் மானியத்துடன் கேஸ் வழங்குவதும், பெட்ரோல் டீசல் விலை குறைப்பது மின்சார கணக்கீடு உள்ளிட்டவை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது. தற்பொழுது 2026 காண சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையானது மத்திய அரசின் திட்டங்களுடன் தொடர்புடையது. குறிப்பாக சொல்லப்போனால் மருத்துவமனைகளில் இரண்டு மடங்காக உயர்த்தப்படும் டயாலிசிஸ் திட்டம் என்பது பிரதமரின் டயாலிசிஸ் திட்டம் தான். இது மாவட்டம் தோறும் டயாலிசிஸ் திட்டத்தை கொண்டு வந்தது பிரதமர் மோடி தான். அதை விரிவு படுத்துவோம் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
அதேபோல் நான் முதல்வன் திட்டம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களால் அடல் ஸ்கில் மேம்பாடு என்ற திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் மத்திய அரசிடம் இருக்கும் திட்டங்களை விரிவு படுத்த கூடிய வகையில் திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக டோக்கன். எட்டாயிரம் ரூபாய் டோக்கன் கொடுக்கப்பட்டிருக்கிறது. டோக்கன் என்றவுடன் நான் பயந்துவிட்டேன். ஏனென்றால் டாஸ்மாக் கடைகளில் மட்டும் தான் டோக்கன் வழங்குகிறார்கள். அதை நோக்கி தான் ஆட்சி சென்று கொண்டிருக்கிறது.
தொடர்புகள் டாஸ்மாக்கை மூடுவோம் என்று சொன்னார்கள். சராசரியாக தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்திலிருந்து 6ஆயிரம் ரூபாய் வரை டாஸ்மாக் செல்வதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். அதனை கட்டுப்படுத்தாமல் இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டால் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. அதேபோன்று சுய உதவி குழுவிற்கு கடன் உதவித் தொகையை அறிவித்திருக்கிறார்கள். அது ஏற்கனவே மத்திய அரசு திட்டத்தில் உள்ளது. இது அனைத்துமே மத்திய அரசின் திட்டம் தான் ஆனால் இதனை திமுக விரிவுபடுத்த ஏற்பாடு செய்துள்ளது என்று கூறினார்.