வரும் சட்டமன்ற தேர்தலுகாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கொளத்தூரில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
இதனால் தமிழக அரசியல் களம் புதிய புதிய அறிவிப்புகளால் பரபரப்பாக காணப்படுகிறது.இந்த நிலையில் திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட உள்ளார். அதற்காக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க இதுவரை நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் இல்லாத அளவிற்கு இந்த முறை 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. 200 க்கு 200 என்ற இலக்குடன் திமுக முழுவீச்சில் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
நெருக்கடியில் திமுக! கூட்டணி என்னாகும்?
குறிப்பாக திமுக கூட்டணியில் கடந்த சில நாட்களாக சலசலப்பு இருந்து வருகிறது இதற்கு காரணம் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையும் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது குறித்தும், தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களை கவரக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்று திமுகவிற்கு பல்வேறு நெருக்கடிகள் இருந்தது.
ஆனால் கூட்டணி கட்சிகளுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு தொகுதி பங்கீட்டை சுமூகமாக முடித்துக் கொண்டு தற்போது, திமுக தேர்தல் அறிக்கையும் வெற்றிகரமாக வெளியிட்டுள்ளது. மறுபுறம் அதிமுகவோ மூன்று கட்டங்களாக தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகமும் இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில் கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மதியம் 12:30 மணி அளவில் தேர்தலுக்கான வேட்பு மனுவை ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ளார்.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்யப்பட்டபோது சில கூட்டணி கட்சிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட தொகுதிகளில் முழுமையான திருப்தி இல்லாமல் இருந்ததாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இருந்தாலும் தனிப்பட்ட எதிர்ப்புகளை விட கூட்டணியின் மொத்த வெற்றியை முன்னிலைப்படுத்தி தலைமை எடுத்த முடிவை கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொண்டதாக பார்க்கப்படுகிறது.மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் சமநிலையாக ஒருங்கிணைத்து முன்னெடுத்து செல்வதன் மூலம் பெரிய அளவிலான வெற்றியை இலக்காக வைத்திருக்கிறார் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பல கூட்டணி கட்சிகள் இருந்தபோதிலும் திமுக 165 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுவது அதன் வலிமையை காட்டும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.அதே நேரத்தில், கடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021-இல் திமுக வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது அதன் தேர்தல் அறிக்கையே.
இதேபோல் இம்முறையும் பல்வேறு மக்கள் நல திட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதால், அது வாக்காளர்களை ஈர்த்து திமுகக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறனர். இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 2ஆம் தேதி திருவாரூரில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்க உள்ளார். ஏப்ரல் 21ஆம் தேதி கொளத்தூர் தொகுதியில் தன்னுடைய இறுதி பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
