பெரம்பூரில் களமிறங்கும் தவெக தலைவர் விஜய்.. வெளியான நாளை பிரச்சாரம் தொடக்கம் – முழுவிரம் இதோ! – tvk leader vijay begins his campaign tomorrow in the chennai perambur assembly constituency

தான் போட்டியிடும் சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் நாளை பிரச்சாரத்தை தவெக தலைவர் விஜய் தொடங்குகிறார்.

vijay campaign(புகைப்படங்கள்Samayam Tamil)
2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்று கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நேற்று 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவித்தார். அந்த வகையில், விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

பெரம்பூர் சட்டமன்ற தேர்தல் 2026

மேலும் அரசியல் வட்டாரத்தில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக விஜயே நேற்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் களமிறங்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனால் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி நட்சத்திர அந்தஸ்து உடைய தொகுதியாக தற்பொழுது பார்க்கப்படுகிறது.

நெருக்கடியில் திமுக! கூட்டணி என்னாகும்?

இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு எதிராக திமுக சார்பில் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள ஆர். டி. சேகருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை நகரமயமாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இங்கு இளம் வாக்காளர்கள் அதிகம் இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் சிறுபான்மை மற்றும் தலித் சமூகங்களின் எண்ணிக்கை இங்கு கணிசமாக உள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக ஆர்.டி. சேகர் களமிறக்கப்பட்டு சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

விஜய் தமிழக வெற்றிக்கழகம் பிரச்சாரம்

அதே நேரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தனபால் 50 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தார். இந்த சூழலில் கடந்த தேர்தலில் அடைந்த தோல்வியை கருத்தில் கொண்டு அதிமுக இந்த முறை பெரம்பூர் தொகுதியில் முன்னிலை வகிக்கவில்லை. இந்த தொகுதியை தற்பொழுது கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவுக்கு ஒதுக்கியுள்ளது. இதனால் பெரம்பூர் தொகுதியில் பாமக மற்றும் திமுக இடையே போட்டி நிலவு உள்ளது. இப்படியான சூழ்நிலையில் பெரம்பூரில் தவெக சார்பில், விஜய் மார்ச் 28 ஆம் தேதி பிரச்சார மேற்கொள்ள காவல்துறையினருக்கு மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்ட விஜய் காலை 10 மணிக்கு பெரம்பூர் எம்கேபி நகரில் பேருந்து நிறுத்தம் அருகே தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். அதன் பிறகு, கொளத்தூர் செந்தில் நகரிலும், வில்லிவாக்கம் ஐ சி எப் சிக்னலிலும், அண்ணா நகர் ரவுண்டானாவிலும் கோயம்பேடு மேம்பாலம் அருகிலும் மொத்தம் ஐந்து இடங்களில் பிரச்சாரம் நடத்த திட்டமிட பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெரம்பூர் தொகுதி களநிலவரம்

ஆனால் எம் கே பி நகரின் பேருந்து நிலையம் குறுகிய பகுதி என்பதால் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. மேலும் 300 பேர்களுக்கு போதுமான இடத்தில் 3000 பேர் வரக்கூடும் என்பதால் கூட்டத்தில் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தேர்தல் ஆணையம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது .மேலும் விஜய் பிரச்சாரம் நடத்த மாற்று இடத்தை தேர்வு செய்ய காவல்துறை வலியுறுத்தி இருந்தது. இந்த நிலையில் பெரம்பூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தான் போட்டியிடும் சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார் தவெக தலைவர் விஜய்.மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பெரம்பூரில் பிரச்சாரம் செய்யும் அவர், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொளத்தூரில் பிரச்சாரம் செய்கிறார்.மாலை 6 மணி முதல் 7 மணி வரை வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார். பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்போருக்கு தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன