அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நாகர்கோவில் பரப்புரையின்போது எடப்பாடியுடன் நடிகர் அஜுத் குமார் இருக்கும் புகைப்படத்தை தொண்டர் ஒருவர் வழங்கி உள்ளது. இது தற்பொது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் 202
இதனைத் தொடர்ந்து அதிமுக, திமுக, நாம் தமிழர், தவெக, உள்ளிட்ட தேர்தல் களத்தில் இருக்கும் கட்சிகள் மற்றும் கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் வேட்பாளர்கள், தேர்தல் வாக்குறுதிகள் போன்றவற்றை அறிவித்து வருகிறது. இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளன் சீமான் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட பிறகு தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.தொடர்ந்து மாவட்டம் வாரியாக மக்களை சந்தித்து தங்களது வாக்குறுதிகள் மற்றும் ஆதரவை தேடி வருகின்றன. இந்த சூழலில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யும் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வரும் சட்டமன்ற தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
முதல்ல உடைக்கபோறது திமுகவோட கோட்டையை தான்- விஜய் போடும் மாஸ்டர் பிளான்
எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் பிரச்சாரம்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை தற்பொழுது சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் அதிமுகவின் தளவாய் சுந்தரம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி திருந்த வேனில் நின்றபடி, தளவாய் சுந்தரத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்த பொழுது, எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர் ஒருவர் புகைப்படத்தை பரிசாக வழங்கினார். அதில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் நடிகர் அஜித் குமார் அமர்ந்திருப்பது போன்று நெவர் எவர் கிபப் என்ற வாசகம் அடங்கிய புகைப்படத்தை எடப்பாடி பழனிசாமி தொண்டரிடமிருந்து பெற்றுக்கொண்டார். பின்னர் அந்தப் புகைப்படத்தை தன்னுடைய கையில் வைத்துக் கொண்டு கேமராவுக்கு போஸ் கொடுத்தார்.
அஜித் குமார் எடப்பாடி புகைப்படம் வைரல்
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறார் . விஜய் சினிமாவில் இருந்த காலத்தில் அவரது ரசிகர்கள் நடிகர் அஜித் குமார் மற்றும் அவரின் ரசிகர்களை அடிக்கடி விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது அரசியல் சூழலில் அஜித் ரசிகர்களின் வாக்குகள் எந்த கட்சிக்கு செல்லும் என்பது ஒரு முக்கிய கேள்வியாக உருவாகியுள்ளது.
அஜித் ரசிகர்களின் ஆதரவை பெற பல்வேறு அரசியல் கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றன. மேலும் இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டுமென்ற முனைப்புடன் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். அந்த வகையில் அஜித் குமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை ஒரு ஆதரவாளர் பரிசாக வழங்கிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இது, அஜித் ரசிகர்களின் மனதை கவர அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
