தர்மபுரி சௌமியா அன்புமணி, பெரம்பூர் திலகபாமா- பாமக முழு வேட்பாளர் பட்டியல் வெளியானது! – pmk completed candidates list with sowmiya anbumani in dharmapuri constituency

அன்புமணி தரப்பில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தற்போது நிறைவு பெற்றுள்ளது. சற்றுமுன் 15 தொகுதிகளில் களம் காணும் வேட்பாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

PMK Candidates List 2026(புகைப்படங்கள்Samayam Tamil)
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில் ஒன்றுபட்ட பாமகவாக போட்டியிட்ட நிலையில், இம்முறை தந்தை – மகன் மோதலால் இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கின்றன. ராமதாஸ் தலைமையில் தனி அணியாகவும், அன்புமணி தலைமையில் தனி அணியாகவும் களம் காண்கின்றனர்.

பாமக முதல்கட்ட வேட்பாளர்கள் லிஸ்ட்

ஏற்கனவே தமிழகம் தழுவிய அளவில் அன்புமணி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த சூழலில் முதல்கட்டமாக கீழ்வேளூர் – வடிவேல் ராவணன், அம்பத்தூர் – கே.என்.சேகர், செஞ்சி – கணேஷ் குமார் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் எஞ்சிய 15 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அன்புமணி அதிமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டார், ராமதாஸ் சிக்னல் என்ன_ கூட்டணி யாருடன்_

  1. பெரம்பூர் – திலகபாமா
  2. தர்மபுரி – சௌமியா அன்புமணி
  3. விருத்தாசலம் – தமிழரசி ஆதிமூலம்
  4. விக்கிரவாண்டி – மயிலம் சிவக்குமார்
  5. சேலம் மேற்கு – மு.கார்த்தி
  6. சேலம் வடக்கு – சதாசிவம்
  7. பென்னாகரம் – பாடி வெ.செல்வம்
  8. சோளிங்கர் – வழக்கறிஞர் க.சரவணன்
  9. மயிலாடுதுறை – சித்தமல்லி ஏ.பழனிச்சாமி
  10. உத்திரமேரூர் – பெ.மகேஷ்குமார்
  11. போளூர் – சி.ஆர்.பாஸ்கரன்
  12. திருப்போரூர் – வழக்கறிஞர் கே.பாலு
  13. ஜெயங்கொண்டம் – க.வைத்தி
  14. ரிஷிவந்தியம் – அ.ப.செழியன்
  15. காட்டுமன்னார்கோயில் – மருத்துவர் அன்பு.சோழன்

பெரம்பூரில் விஜய் vs திலகபாமா

இதில் பெரம்பூர் தொகுதி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவதால் பெரிய அளவில் கவனம் குவிந்திருக்கிறது. இதில் பாமக சார்பில் திலகபாமா போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே தேர்தல் வேலைகளை தொடங்கி விறுவிறுவென மேற்கொண்டு வருகிறார். தர்மபுரி தொகுதியில் அன்புமணியின் மனைவியும், பசுமை தாயகம் அமைப்பின் தலைவருமான சௌமியா போட்டியிடுகிறார்.

தர்மபுரியில் சௌமியா அன்புமணி போட்டி

இவர் ஏற்கனவே 2024 மக்களவைத் தேர்தலில் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 4,11,367 வாக்குகளை பெற்றிருந்தார். தர்மபுரி மாவட்டத்தை பொறுத்தவரை வன்னியர் வாக்குகள் அதிகமிருப்பதால் பாமகவின் வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக கூறப்படுகிறது. விருத்தாசலம் தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இதுவும் கவனம் ஈர்க்கும் தொகுதியாக மாறியுள்ளார்.

அருள் தொகுதியில் மு.கார்த்தி

சேலம் மேற்கு தொகுதியில் கடந்த முறை பாமக சார்பில் அருள் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் இம்முறை ராமதாஸ் அணியில் இருக்கும் சூழலில், மு.கார்த்தியை அன்புமணி இறக்கியுள்ளார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ என்பது கவனிக்கத்தக்கது. சேலம் வடக்கு தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள சதாசிவம் தற்போது மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார். பென்னாகரம் தொகுதி தற்போது ஜி.கே.மணி வசமுள்ளது. இவர் ராமதாஸ் அணியில் இருக்கிறார்.

பென்னாகரம் தொகுதியில் தமிழ்க்குமரன்?

இம்முறை இவரது மகன் தமிழ்க்குமரன் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இங்கு பாடி வெ.செல்வம் அவர்கள் அன்புமணி பாமக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளது. திருப்போரூர் தொகுதியில் வழக்கறிஞரும், பாமக செய்தி தொடர்பாளருமான கே.பாலு நிற்கிறார். காட்டுமன்னார்கோயில் தொகுதியில் திமுக கூட்டணியில் விசிக சார்பில் திருமாவளவன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாமக சார்பில் அன்பு.சோழன் நிறுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் 5 பேர் எம்.எல்.ஏக்களாக வெற்றி பெற்றனர். இதில் 3 பேர் அன்புமணி பக்கம் இருக்கின்றனர். இதில் சிவக்குமார், சதாசிவம் ஆகிய இரண்டு பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.