மோசடிகளை தடுக்க வங்கி ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் 1-ந் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமல்

சென்னை,

தற்போது ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை பயன்படுத்தப்படுகிறது. இதனை தடுக்க வருகிற 1-ந் தேதி முதல் வங்கி பண பரிவர்த்தனையில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-

1. ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்யும் முறை, ஓ.டி.பி.(ரகசிய குறியீடு எண் உள்ளிடும் முறை மற்றும் வங்கி கணக்கை பாதுகாப்பாக வைத்திருக்கும் முறை ஆகியவை முற்றிலும் மாறும். ஒவ்வொரு பரிவர்த்தனையும் எங்கிருந்து செய்யப்படுகிறது என்பது சரிபார்க்கப்படும்.

2. வங்கி செயலியில் ஸ்கிரீன் ஷாட் அல்லது ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய முடியாது. அது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இதன் மூலம் மோசடி ஆசாமிகள் அதை வைத்து ரகசிய குறியீடு, கடவுச்சொல் ஆகிய வற்றை கண்டுபிடித்து, பணத்தை பறிப்பது தவிர்க்கப்படுகிறது.

3. இரவு நேர பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர் தாங்களே மூடி வைக்கலாம். விரும்பினால் காலை 11 மணி முதல் இரவு 6 மணி வரை பரிவர்த்தனைகளை முடக்கி கொள்ளலாம். இந்த நேரத்தில் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கூட யாராலும் எடுக்க முடியாது.

4. ஏதேனும் மோசடி செயலி அல்லது மால்வேரை தவறுதலாக பதிவிறக்கம் செய்தால், உடனடியாக எச்சரிக்கை செய்யப்படும்.

5. ரகசிய குறியீடு முறையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதாவது எஸ்.எம்.எஸ்.-ல் ஓ.டி.பி. அனுப்புவது தடை செய்யப்படுகிறது. பயன்படுத்தும் செயலி அல்லது வங்கி செயலியில் ஒ.டி.பி. பெற முடியும்.

6. ஒவ்வொரு பரிவர்த்தனையின்போதும் கூடுதல் கேள்விகள் கேட்கப்படலாம். அதாவது ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனை நடந்தால், வாடிக்கையாளரின் தாயாரின் பெயர் என்ன, எந்த பள்ளியில் படித்தீர்கள் அல்லது உள்ளிட்டுள்ள பாதுகாப்பு கேள்விகள் கேட்கப்படலாம். சரியான பதிலை அளித்தால், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்தான் இதை செய்கிறார்கள் என்பது புரிந்து கொள்ளப்படும். இல்லையெனில் மோசடி செய்பவர்களாக இருக்கலாம் என்று வங்கிக்கு தகவல் செல்லும்.

7. தட்டச்சு செய்யும் விதம், தட்டச்சு வேகம் மற்றும் திரையை கையாளும் விதம் ஆகியவற்றின் மூலம் சம்பந்தபட்ட வாடிக்கையாளர்தான் பயன்படுத்துகிறாரா என்பதை பயோமெட்ரிக் மூலம் வங்கி செயலி உறு திப்படுத்தும்.

8. வங்கி செயலி மூலம் ரூ.5 லட்சம், ரூ.8 லட்சம், ரூ.10 லட்சம் போன்ற பெரிய தொகையை பரிவர்த்தனை செய்தால், ஆதார் இணைப்பு, கைரேகை, முக ஸ்கேன் கேட்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Source link