திமுகவின் தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார். இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் இந்த விமர்சனத்திற்கு அமைச்சர் முத்துசாமி பதிலடி கொடுத்துள்ளார்
முக்கிய அம்சங்கள்:
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
அமைச்சர் முத்துசாமி பதிலடி
அதுமட்டுமல்லாமல் திமுகவின் தேர்தல் அறிக்கை தான் எப்போதும் ஹீரோ, தற்போது திமுவின் தேர்தல் அறிக்கை சூப்பர்ஸ்டாராக இருக்கின்றது என்றார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவின் தேர்தல் அறிக்கை பவர் ஸ்டார் என கூறி விமர்சித்து இருக்கின்றார். அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்துள்ளார் முக ஸ்டாலின் என கூறி கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
மேலும் இந்த தேர்தல் களத்தில் ஒரே சூப்பர்ஸ்டார் அதிமுகவின் அறிக்கை தான். திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது பவர் ஸ்டார் போல காமெடியாக தான் பார்க்கப்படுகின்றது என்றார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த விமர்சனங்களுக்கு திமுக அமைச்சர் முத்துசாமி பதிலடி கொடுத்திருக்கின்றார்.
அவர் கூறியது, எதை சொன்னாலும் காப்பி அடித்திருக்கின்றோம் என சொல்கின்றனர். அப்படியென்றால் நாங்கள் 2021 ஆம் ஆண்டு வெளியிட்ட தேர்தல் அறிக்கையை பார்த்து தான் அவர்கள் தற்போது தங்களது தேர்தல் அறிக்கையை தயார் செய்து வெளியிட்டார்களா ? தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் முக ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார், அதைப்போல துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி அவர்களின் தலைமையிலான குழுவினரின் சுற்றுப்பயணம் என கடும் உழைப்பிற்கு மத்தியில் கள ஆய்வு செய்து தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளோம்.
சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் கோரிக்கையை கேட்டறிந்து தயார் செய்யப்பட்டது தான் திமுகவின் தேர்தல் அறிக்கை. வேறு யாரையும் பார்த்தும் காப்பி அடிக்கும் நிலை எங்களுக்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் திமுகவின் தேர்தல் அறிக்கையை தான் பிற மாநிலங்களின் பின்பற்றுகின்றனர். மற்ற மாநிலத்தில் இருக்கும் முதல்வர்கள் எல்லாம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தேர்தல் அறிக்கையை தான் பார்த்து பின்தொடர்ந்து வருகின்றனர்.
எனவே எடப்பாடி பழனிசாமியை பார்த்து தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்கும் அவசியம் எங்களுக்கு இல்லை என கூறி பதிலடி கொடுத்திருக்கின்றார் அமைச்சர் முத்துசாமி. இவ்வாறு திமுகவினர் அடுத்தடுத்து தேர்தல் அறிக்கையை விமர்சித்த எதிர்கட்சியினருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறு ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கைகளையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகின்றது.
DMK தேர்தல் அறிக்கை: Kanimozhi முதல்வரை சந்தித்த பிறகு வழங்கிய முக்கிய அப்டேட்
ஆனால் அந்த தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களில் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றது என்பது தான் மிக முக்கியமான விஷயமாக பார்க்க வேண்டும். அதே சமயம் திமுக தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கின்றனர் என்பது தான் மிகவும் முக்கியமான ஒரு அங்கமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மற்றபடி எதிர்க்கட்சியினர் மாறி மாறி அறிக்கைகளை விமர்சித்து வருவது வழக்கமான ஒன்று தான் என்பது குறிப்பிடத்தக்கது.
