ஏன் வேட்பாளர்களை  குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கக் கூடாது? : தமிழக காங்கிரசை சீண்டும் பிரவீன் சக்கரவர்த்தி  – Kumudam

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள சூழலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வு முறையில் நிலவும் குளறுபடிகளை அக்கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி கடுமையாக விமர்சித்துள்ளார். 

திமுக கூட்டணியில் முதல் கட்சியாகத் தொகுதிப் பங்கீட்டை முடித்த போதிலும், வேட்பாளர்களை அறிவிப்பதில் காங்கிரஸ் தொடர்ந்து தாமதம் காட்டி வருகிறது. இந்நிலையில், அக்கட்சியின் வியூகக் குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் தளத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல்பாடுகளைக் கிண்டல் செய்யும் விதமாகப் பதிவிட்டுள்ளார்.

அதில், “குறைவான சீட் ஏராளமான விண்ணப்பதாரர்கள். இதில் பாதி தலைவர்கள் குடும்பத்தினருக்கு ஒதுக்கீடு. ஒவ்வொரு தேர்தலின் தமிழ்நாடு காங்கிரஸின் கதை. கூட்டணியில் சீட் எண்ணிக்கையை அதிகரிக்கும் திறன் இல்லையென்றால், ஏன் வேட்பாளர்களை  குலுக்கல் முறையில் (Lottery) தேர்ந்தெடுக்கக் கூடாது? 

தேர்தல் முடிவில் எந்த மாற்றமும் இருக்காது குறைந்தபட்சம் வேட்பாளர் தேர்வு முறையாவது நேர்மையாகவும் நீதியாகவும் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். பெரிய கட்சி முதல் குட்டி கட்சிகள் வரை வேட்பாளரை அறிவித்த நிலையில், காங்கிரசு இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் தாமதப்படுத்தி வருவது குறிப்பிடதக்கது. 

Source link