திருச்சியில் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி.. அமைச்சர் கே.என். நேரு சொன்ன முக்கிய தகவல் – dmk minister kn nehru comments on tvk vijay contesting trichy east

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரட்டை தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் போட்டியிடவிருக்கிறார். இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டிட போவது குறித்து அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

கே.என். நேரு – விஜய்
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளன. இன்று முதல் வேட்புமனுத் தாக்கல் துவங்கியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூரில் வேட்புமனுத் தாக்கல் செய்து பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். முன்னதாகவே எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாதக சீமான் தீவிரமான பிரசாரத்தில் ஆரம்பித்து விட்டனர். இதனால் தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இரண்டு தொகுதிகளை தேர்ந்தெடுத்த விஜய்

இதனிடையில் தமிழக வெற்றிக் கழகத்துடன் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க முன்வாரத நிலையில், தனித்து களம் காண உள்ளது. இதனை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் 234 தொகுதியுள்ள போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அறிவித்தார். நேற்றைய தினம் இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளார். பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகள் அவர் போட்டியிடவிருக்கிறார்.
தோல்வி பயத்தில் எடுத்த முடிவு என்ற விமர்சனம்
அரசியல் கட்சி துவங்கியுள்ள விஜய் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார். திமுக, தவெக இடையில் தான் போட்டி என அவர் தொடர்ச்சியாக கூறி வரும் நிலையில், இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிட உள்ளதாக எடுத்துள்ள முடிவு சில விமர்சனங்களை கிளப்பியுள்ளது. தோல்வி பயத்தால் அவர் இரண்டு தொகுதிகளில் போட்டி போடவுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.
திருச்சி கிழக்கு தொகுதி
இந்நிலையில் திருச்சியில் விஜய் போட்டியிட போவது குறித்து திமுக அமைச்சர் கே.என். நேரு சில கருத்துக்கள் தெரிவித்துள்ளார். அதன்படி செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் விஜய் தோல்வி பயத்தால் இரண்டு தொகுதிகளில் போட்டியிட போவதாக கூறப்படுகிறதே என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, தேர்தலில் யாரும் எங்கும் போட்டியிடுவதற்கு அரசியல் சட்டத்தில் இடமுள்ளது. அந்த வகையில் அவரும் திருச்சியில் போட்டியிடுகிறார்.
அமைச்சர் கே.என். நேரு விமர்சனம்
களத்திலே சென்று மக்கள் யாருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும். தளபதி அவர்களுக்கு தான் ஆதரவாக மக்கள் வாக்களிப்பார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை. அரசியல் சட்டத்தில் இரு தொகுதிகளில் போட்டியிட இடம் இருக்கிறது. பயமாக கூட இருக்கலாம். திருச்சி கிழக்கை பொறுத்தவரைக்கும் 1977 ஆம் ஆண்டு எந்த பகுதியிலும் வெற்றி பெறாத சமயத்தில் வெற்றி பெற்ற பகுதி திருச்சி கிழக்கு.
திமுக தேர்தல் அறிக்கை
எனவே எந்த தொகுதி திமுக பக்கம் இருக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார். தொடர்ந்து திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து பேசும்போது, இந்த பொருள் தான் என்று இல்லாமல். பிடித்த பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று எட்டாயிரம் கூப்பன் தருவது. முதியோர் உதவித்தொகை உயர்வு என மகளிருக்கான திட்டம், மக்களுக்கான திட்டம், விவசாயிகளுக்கான திட்டம் என அனைத்து இடம்பெற்றுள்ளது.
வேட்புமனுத் தாக்கல் செய்த தவெக தலைவர்
திமுகவின் கதாநாயகனாக தேர்தல் அறிக்கை உள்ளது. மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். சிறப்பாக ஆட்சி அமைவதற்கு ஆதரவு அளிப்பார்கள். தேர்தலில் போட்டியிடும் அனைவரும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று சொல்வது வழக்கமான ஒன்றுதான். இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். இதனிடையில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய், இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து திருச்சியில் வரும் 2 ஆம் தேதி அவர் வேட்புமனுத் தாக்கல் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.