ஜெய்ப்பூர்,
19 வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. கவுகாத்தியில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
தசை பிடிப்பு காரணமாக 2 வாரங்களுக்கு ஓய்வு பெற்றுள்ள தோனி இந்த போட்டியை தவற விடுகிறார். அதே போல மற்றொரு சென்னை அணி வீரரான டிவால்ட் பிரெவிசும் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இரு அதிரடி வீரர்கள் இன்றி சென்னை அணி, ராஜஸ்தான் அணியை இன்று எதிர்கொள்ள உள்ளது. அணியில் புதிதாக இணைந்துள்ள சஞ்சு சாம்சன், அணிக்கு நம்பிக்கை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணி வீரர்கள் விவரம்;
சென்னை : ருதுராஜ் கெய்க்வாட் (கே), சஞ்சு சாம்சன் (வி.கீ), ஆயுஷ் மத்ரே, மாட் ஷார்ட், சிவம் துபே, கார்த்திக் ஷர்மா, பிரசாந்த் வீர், ஜேமி ஓவர்டன், நூர் அகமது, மாட் ஹென்றி, கலீல் அகமது,
ராஜஸ்தான் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூரியவன்ஷி, ரியான் பராக் (கே), துருவ் ஜூரல் (வி.கீ), ஷிம்ரோன் ஹெட்மியர், ரவீந்திர ஜடேஜா, டோனோவன் பெரீரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ரவி பிஷ்னோய், துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா,
