முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு வெளியானது..சொந்தமாக ஒரு கார் கூட இல்லை- முழு விவரம் இதோ – chief minister stalin asset details revealed doesnot own even a single car full details here

முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் ₹7.64 கோடி சொத்து மதிப்பு மற்றும் அவருக்குச் சொந்தமாக கார் ஏதுமில்லை என்ற சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

MK Stalin Assets 2026(புகைப்படங்கள்Samayam Tamil)
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் அதிகாரப்பூர்வமாக வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதனுடன் அவர் சமர்ப்பித்துள்ள பிரமாணப் பத்திரத்தில் (Affidavit), தனது மற்றும் தனது மனைவியின் சொத்து விவரங்களைத் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி, அவரது சொத்து விவரங்கள் பின்வருமாறு:
முதல்வரின் அசையும் சொத்து: ₹3.30 கோடி.
முதல்வரின் அசையா சொத்து: ₹4.34 கோடி.
மனைவி துர்கா ஸ்டாலின் சொத்து: இவரது பெயரில் ₹1.32 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளன
சொந்தமாக கார் இல்லை

முதல்ல உடைக்கபோறது திமுகவோட கோட்டையை தான்- விஜய் போடும் மாஸ்டர் பிளான்

இந்த வேட்புமனுவில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரில் சொந்தமாக கார் அல்லது எந்தவொரு வாகனமும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தற்போது பயன்படுத்தி வரும் சொகுசு வாகனங்கள் அனைத்தும் அரசுக்குச் சொந்தமானவை அல்லது கட்சிப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் vs ஸ்டாலின்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் மெகா மோதுதலாகப் பார்க்கப்படும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோரின் சொத்து விவரங்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளன. இன்று தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் படி, பல தசாப்தங்களாக அரசியலில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை விட, திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து உள்ள விஜய் சுமார் 81 மடங்கு அதிக சொத்து கொண்டு உள்ளார். விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு ₹624.15 கோடி என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் மொத்த சொத்து மதிப்பு ₹7.64 கோடி மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது.
நிதி ரீதியாகப் பார்க்கும்போது, விஜய்யிடம் ₹404 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும், 110 சவரன் தங்கமும் உள்ளன. ஆனால், ஆளும் கட்சியின் தலைவரான ஸ்டாலினிடம் ₹3.30 கோடி மட்டுமே அசையும் சொத்தாக உள்ளது. இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், கோடிக் கணக்கான ரசிகர்களைக் கொண்ட சூப்பர் ஸ்டார் விஜய்யிடம் பல சொகுசு கார்கள் இருக்கும் நிலையில், தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் பெயரில் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்பது பிரமாணப் பத்திரத்தில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தேர்தல் களத்தைப் பொறுத்தவரை, ஸ்டாலின் தனது பாரம்பரியத் தொகுதியான கொளத்தூரில் மட்டும் போட்டியிடுகிறார். ஆனால், விஜய் ஒரு படி மேலே சென்று வட சென்னையில் பெரம்பூர் மற்றும் மத்திய தமிழகத்தில் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் களம் காண்கிறார். அனுபவம் வாய்ந்த ‘திராவிட மாடல்’ அரசியல் ஒருபுறம், ‘புதிய மாற்றத்திற்கான’ விசில் புரட்சி மறுபுறம் எனத் தமிழக தேர்தல் களம் இந்த இரு துருவங்களின் மோதலால் இப்போதே அனல் பறக்கத் தொடங்கி உள்ளது.