Tvk Aadhav Arjunaa,பெரம்பூரில் பாதுகாப்பு இருந்தது..ஆனால் கொளத்தூரில் இல்லை..இது திட்டமிட்ட சதி : ஆதவ் அர்ஜுனா – tvk aadhav arjunaa about vijay campaign in perambur and kolathur

தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை இன்று நடைபெற்றது. ஆனால் வில்லிவாக்கத்தில் விஜய்யின் பரப்புரை நினைத்தவாறு நடக்கவில்லை. இதனைத்தொடர்ந்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா இதுகுறித்து பேசியிருக்கிறார்

முக்கிய அம்சங்கள்:

விஜய்யின் பரப்புரை

ஆதவ் அர்ஜுனா பேச்சு

aadhav arjuna about vijay campaign
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் தனது பரப்புரையை துவங்கி மேற்கொண்டு வருகின்றார். இன்றைய தினம் விஜய் தனது பரப்புரையை பெரம்பூர் தொகுதியில் மேற்கொண்டார். தான் போட்டியிடும் தொகுதியிலேயே தனது பரப்புரையை துவங்கினார் விஜய். அதனைத்தொடர்ந்து கொளத்தூரிலும் விஜய் தனது பரப்புரையை செய்தார். ஆனால் வில்லிவாக்கம் தொகுதியில் விஜய்யின் பரப்புரை ரத்து செய்யப்பட்டது.இதனால் வில்லிவாக்கம் தொகுதியில் விஜய்யின் பரப்புரையை காண காத்திருந்த ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில் இதுகுறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா இன்று நடந்த பரப்புரை குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசியது, தவெக தலைவர் விஜய்யை காண ஏராளமானோர் வருகின்றனர். அப்படி வரும் மக்களுக்கு போலீசார் பாதுகாப்பு தர வேண்டும். அதை தான் நாங்கள் கேட்கின்றோம்.
தவெக தலைவர் விஜய்யின் கூட்டத்திற்கு பாதுகாப்பு தரக்கூடாது என நினைக்கின்றனர். மக்களின் பாதுகாப்பை தாண்டி விஜய்யின் கூட்டத்தை தடுக்க நினைக்கின்றனர் என்றார் ஆதவ் அர்ஜுனா. மேலும் எங்கள் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். அதற்கான அனுமதிகள் எங்களுக்கு கிடைத்து வருகின்றது
நான் காவல்துறையை ஒட்டுமொத்தமாக குற்றம் சொல்லவில்லை. பெரும்பூர் தொகுதியில் பாதுகாப்பு சிறப்பாக இருந்தது. பக்காவாக பிளான் போட்டு பாதுகாப்பு கொடுத்தார்கள். ஆனால் அதே பாதுகாப்பு கொளத்தூர் தொகுதியில் இல்லை. கொளத்தூரில் எந்த ஒரு பிளானும் இல்லாமல் இருந்தது. இதனால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.
பேச்சை விரைவாக முடிக்க நேர்ந்தது. இதுகுறித்து நாளை பேச இருக்கின்றோம் என்றார் ஆதவ் அர்ஜுனா. இதனைத்தொடர்ந்து முதல்வர் முக ஸ்டாலினின் பரப்புரைக்கு வரும் கூட்டத்தை விட தவெக தலைவர் விஜய்க்கு கூட்டம் அதிகமாக வருவதாக ஆதவ் அர்ஜுனா பேசியதாக சொல்லப்படுகின்றது. ஆனால் ஆதவ் அர்ஜுனா இதற்கு மறுப்பு தெரிவித்து பேசியிருக்கிறார்.
முக ஸ்டாலின் அவர்களின் பரப்புரையை நான் குறைத்து மதிப்பிட்டு பேசவில்லை. அதே சமயம் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரைக்கு மிகப்பெரிய அளவில் மக்கள் கூட்டம் வருகின்றது. எனவே முக ஸ்டாலினின் பரப்புரைக்கு கொடுக்கும் அதே பாதுகாப்பை விஜய்க்கும் கொடுக்க வேண்டும். அனைத்து கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என முறையிட்டார் ஆதவ் அர்ஜுனா.
நான் மறுபடியும் சொல்கின்றேன், பெரம்பூர் தொகுதியில் பாதுகாப்பு பிளான் பக்காவாக இருந்தது. ஆனால் கொளத்தூர் தொகுதியில் சுத்தமாக பாதுகாப்பு இல்லை. மக்கள் கொளத்தூர் தொகுதியில் அவதிப்பட்டனர். இது திட்டமிட்ட சதி , இது கண்டிப்பாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முக ஸ்டாலின் அவர்களுக்கு பாதகமாக அமையும். அவருக்கு எதிராக திரும்பும் என கூறினார் ஆதவ் அர்ஜுனா.
இந்நிலையில் தவெககட்சியினர் தொடர்ந்து தங்களின் கூட்டத்தை தடுக்க சதி நடப்பதாக முறையிட்டுக்கொண்டு வருகின்றனர். ஆனால் அதே சமயம் எதிர்கட்சிகளான அதிமுகவினர் பரப்புரையை எந்த பிரச்சனையும் இல்லாமல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் முழுக்க எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் பல தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

பொதுக்கூட்டத்தில் எதிர்பார்த்தது இது தான்…Tada Rahim-ன் கருத்து!

அந்த பரப்புரை எல்லாம் மிகவும் பாதுகாப்பான முறையில் நடந்தது. அவர்கள் எந்த ஒரு குற்றச்சாட்டுகளையும் கூறவில்லை. ஆனால் தவெக கட்சி நடத்தும் கூட்டத்தில் மட்டும் பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதற்கு என்ன காரணம் ? விஜய்யின் பேச்சை கேட்க ஏராளமான பேர் வருவது தான் இதற்கு காரணமா ? அல்லது தவெகவினர் குற்றம் சாட்டுவது போல சரியான பாதுகாப்பு கொடுக்கப்படவில்லையா ? என்ற கேள்வி எழுகின்றது. ஆனால் அரசு தரப்பை கேட்கும்போது அனைத்து கட்சிகளுக்கும் சரி சமமான பாதுகாப்பை வழங்கி வருவதாகவே கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.