ஓடிடியில் வெளியாகும் ராதிகாவின் “தாய் கிழவி”…எதில், எப்போது பார்க்கலாம்?

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 27ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இதில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி பெற்றுள்ளது.இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முதிர்ந்த தோற்றத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சமூகத்தில் நல்ல கருத்தை காமெடி கதைக்களத்தில் சொல்லும் இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் 25 நாட்களில் ரூ. 75 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந் நிலையில், ராதிகாவின் ‘தாய் கிழவி’ படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரும் ஏப்ரல் 10ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link