தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ், இந்தியில் சல்மான் கானை வைத்து இயக்கிய ‘சிக்கந்தர்’ படம் படுதோல்வியை சந்தித்தது. அதேவேளை தமிழில் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய ‘மதராஸி’ படம் ரூ.100 கோடி வசூலை தாண்டியிருந்தது.
இதற்கிடையில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் இயக்குனர் சங்கத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது ‘மதராஸி’ படத்தின் தயாரிப்புக் குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறதாம்.
அதாவது ‘மதராஸி’ படத்தை ரூ.115 கோடியில் எடுத்து முடிப்பதாக பட்ஜெட் போட்ட ஏ.ஆர்.முருகதாஸ், படத்தை முடிக்கும் போது ரூ.170 கோடியாக அதை உயர்த்திவிட்டார். உரிய திட்டமிடுதல் இல்லாததும், ஒரு படத்தை இயக்கிய சமயம், இன்னொரு படத்தை இந்தியில் (சிக்கந்தர்) இயக்கி வந்ததுமே இதற்கு காரணம். எனவே அவர் ரூ.10 கோடி நஷ்டஈடு தரவேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் ‘ரமணா-2’ படத்தின் கதையின் உரிமையை (தெலுங்கில் மட்டும்) ‘மதராஸி’ படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தரவேண்டும் என்று பேசி முடிக்கப்பட்டு ஒப்பந்தமானதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
