“நான் சொன்னபடி தானா பிரியாணி சமைச்சீங்க” நடிகர் அஜித் வீடியோ வைரல் – Kumudam

நடிகர் அஜித் குமார் தன் கார் பந்தயங்களை முடித்துவிட்டு துபையிலிருந்து அண்மையில் சென்னை திரும்பினார். தற்போது, தன் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருவதுடன் ஏகே-64 திரைப்படத்திற்காகத் தயாராகி வருகிறார். இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார்.

நடிகர் அஜித்குமாரின் மகன் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். அவர் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் கால்பந்து பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். அண்மையில் அந்த பயிற்சி மையத்திற்கு மனைவி ஷாலினியுடன் சென்ற அஜித்குமார், தனது மகன் கால்பந்து விளையாடியதை கண்டு ரசித்தார்.

தொடர்ந்து பயிற்சி மைய நிர்வாகிகளுக்கு அஜித் கமகமவென பிரியாணி சமைத்துக் கொடுத்து அசத்தினார். அப்போது, தான் சொன்னபடி சமைத்தீர்களா என்று அஜித்திடம் ஷாலினி கேட்டார். பயிற்சி மைய நிர்வாகிகளுடன் செல்பி எடுத்துக் கொண்ட ஷாலினி, தனது கணவரையும் போஸ் கொடுக்கும்படி அழைத்தார். அஜித்குமாரின் இந்த பிரியாணி சமையல் வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகிறது. 

Source link