தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்றைய தினம் பெரம்பூர் தொகுதியில் பரபரப்புரை மேற்கொண்டார். இதனையடுத்து கொளத்தூர் பகுதிக்கும் பிரச்சாரம் செய்வதற்கு சென்றார். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
பெரம்பூரில் பரப்புரை
அதாவது வேட்புமனுத் தாக்கல் துவங்கிய முதல் நாளில், பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு பணிமனை அருகே பரப்புரையில் ஈடுபட்டார் விஜய். அதனை தொடர்ந்து அவரின் பிரச்சார வாகனம் கொளத்தூர் தொகுதிக்கு சென்ற போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த தொகுதியின் வேட்பாளரை மாற்றி கூறி விஜய் வாக்கு சேகரிப்பு செய்ததும் பரபரப்பினை உண்டாக்கியது.
தவெக விஜய் பிரச்சாரம் ரத்து
இதனிடையில் கொளத்தூர் தொகுதியில் கூட்டம் அதிகமான காரணத்தால், வில்லிவாக்கத்தில் நடைபெறவிருந்த விஜய் பங்கேற்கும் பரப்புரை ரத்து செய்யப்பட்டது. இதனால் இரண்டு இடங்களில் பிரச்சாரத்தை முடித்து விட்டு பனையூர் கிளம்பி சென்று விட்டார் விஜய். இதனிடையில் வில்லிவாக்கத்தில் அவரின் வருகைக்காக காத்திருந்த தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். குழந்தைகளை விட்டு விட்டு விஜய்யை பார்க்க வந்ததாக மகளிரணியை சார்ந்தவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
தேர்தல் நடத்தை விதிமீறல்
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக சென்னை பெரவல்லூர் காவல் நிலையத்தில் விஜய் மீது ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலை கண்காணிப்பு க்கு அதிகாரி குமார் அளித்த புகாரில், ஆம்புலன்ஸ் வரும் வாகனத்தின் பாதையை மறித்து பரப்புரையில் ஈடுபட்டது. பொதுமக்களுக்கு இடையூறை உண்டாக்கியது, 5000 பேருக்கு மேற்பட்டோரை திரட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
நாதக சீமான் கருத்து
இதன் அடிப்படையில் விஜய் உள்ளிட்ட 5,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் பேசுகையில், தம்பி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு என்றால் அதற்கு தேர்தல் ஆணையம் காரணம் சொல்லி இருக்க வேண்டும். அவுங்க கூறி இருக்காங்கன்னு தெரியலை. இப்போ நான் பிரச்சாரம் செய்கிறேன் என்றால் போலீஸ் அனுமதி கேட்பது இல்லை.
பாஜக கொள்கை எதிரி
அவருக்கு என்ன பாதுகாப்பு குறைப்பாடு என்பதை பற்றி அவர் தான் சொல்ல வேண்டும். அப்போது தான் தெரிய வரும். நான் வேற களத்தில் இருக்கிறேன். அதனால் எனக்கு அதைப்பற்றி தெரியவில்லை என கூறியுள்ளார் சீமான். தொடர்ந்து விஜய் குறித்து பேசுகையில், பாஜகவை கொள்கை எதிரி என்றால் எந்த இடத்தில் கொள்கை எதிரி என்பதை சொல்ல வேண்டும். உன்னோட கொள்கையை சொல்லு. அதுக்கப்புறம் உன் கொள்கை எதிரியா இல்லையா என்பதை நாங்க சொல்றோம்.
இதுனால என் கொள்கை எதிரி என்பதை சொல்ல வேண்டும். திமுக ஒழிக்கனும் என்றால், இதன் காரணமாக நான் ஒழிக்கனும் என்று கூற வேண்டும். திமுக 2000 கொடுக்குது. இவர் 2500 கொடுக்கிறேன் சொல்றாரு. இதுனால தான் திமுக, தவெக இடையில் தான் போட்டி என்கிறார். வேற எதுவும் கிடையாது எனவும் ஆவேசமான பேசியுள்ளார் நாதக சீமான். இதனிடையில் பல இடங்களில் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
