புதுடெல்லி,
பீகார் மாநிலம் நாளாந்தா மாவட்டத்தில் உள்ல ஷீத்லா கோவிலில் சிறப்பு வழிபாட்டிற்காக மக்கள் அதிகளவில் கூடி இருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்த அனைவரும் பெண்கள் என தெரியவந்துள்ளது. உள்ளூர் மக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த அம்மாநில தலைமைச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், நாளந்தாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ2.லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும்,
இந்த துயரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உறுதி செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
