Tvk Vijay Campaign In Trichy,ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சி கிழக்கில் தவெக தலைவர் விஜய் பரப்புரை ..காவல் ஆணையரிடம் செங்கோட்டையன் மனு – vijay planning to do campaign in trichy on april 2

தவெக தலைவர் விஜய் அடுத்ததாக திருச்சி கிழக்கு தொகுதியில் பரப்புரை செய்ய இருக்கின்றார். இதற்கு அனுமதி கேட்டு காவல் ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி விஜய் அங்கு பரப்புரை செய்ய திட்டம்

முக்கிய அம்சங்கள்:

திருச்சியில் விஜய் பரப்புரை

செங்கோட்டையன் மனு

vijay trichy campaign
தவெக தலைவர் விஜய் யின் நேற்றைய பரப்புரை சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது. தற்போது அதற்குள் அவரின் அடுத்த பரப்புரை குறித்தான தகவல் கிடைத்திருக்கின்றது. தவெக தலைவர் விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுகின்றார். சென்னை பெரம்பூர் தொகுதியிலும் திருச்சி கிழக்கு தொகுதியிலும் விஜய் போட்டியிடவுள்ளார். இதில் பெரம்பூர் தொகுதியில் நேற்று பரப்புரை செய்தார் விஜய். இந்த பரப்புரையில் தான் விஜய் விதியை மீறியதாக கூறி ஐந்து பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு போடப்பட்டது.இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டு டிஜிபிக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். இந்த சமயத்தில் திருச்சி கிழக்கில் விஜய்யின் பரப்புரைக்கான மனு வழங்கப்பட்டுள்ளது. தவெகவின் செங்கோட்டையன் இந்த மனுவை காவல் ஆணையரிடம் சென்று வழங்கினார். ஏப்ரல் இரண்டாம் தேதி திருச்சி கிழக்கில் பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துள்ளார் விஜய்.
இதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி மனு வழங்கப்பட்டுள்ளது. காவல் பல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருப்பதாக தெரிகின்றது. விஜய்செல்லும் வழியெல்லாம் வாகனங்கள் பின்பற்றக்கூடாது என்பது போன்ற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் நாளை மறுநாள் விஜய் திருச்சி கிழக்கில் பரப்புரை செய்ய முடிவெடுத்து இருக்கும் நிலையில் அவருக்கு உரிய அனுமதியும் பாதுகாப்பும் வழங்கப்படுமா ? என்பது தான் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏற்கனவே பெரம்பூர் பரப்புரையிலேயே பல சர்ச்சைகள் இருந்து வந்தன. முதலில் பெரம்பூர் பகுதியில் பரப்புரை செய்ய விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அதன் பிறகு தலைமை தேர்தல் அதிகாரியை விஜய் நேரில் சந்தித்தார். அதைத்தொடர்ந்து பெரம்பூரில் விஜய் பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டு நேற்று அந்த பரப்புரை கூட்டம் நடந்தது. ஆனால் அந்த பரப்புரையில் பல விதிமீறல்கள் நடந்ததாக கூறி விஜய் மீதும் 500 நபர்கள் மீதும் வழக்கு போடப்பட்டு இருக்கின்றது. இதையடுத்து கொளத்தூரில் பரப்புரை செய்தார் விஜய்.ஆனால் அங்கு எந்த வித பாதுகாப்பும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என தவெகவினர் குற்றம் சாட்டினார்கள்.
வில்லிவாக்கம் பரப்புரையும் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு விஜய்யின் முதல் பரப்புரை நாளான நேற்று பல சர்ச்சைகள் கிளம்பியது. இதையடுத்து நாளை மறுநாள் திருச்சி கிழக்கில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றார். அந்த பிரச்சாரமாவது எந்த வித சர்ச்சையும் இன்றி சுமுகமாக நடைபெறுமா ? என்பது தான் கேள்வியாக இருக்கின்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.
பிறகு ஏன் விஜய்க்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அதிகாரி அனைவருக்கும் சமமான பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி இருக்கின்றார். ஆனால் காவல் அதிகாரிகள் திமுக அரசினர் அனைவருக்கும் சரி சமமான பாதுகாப்பு தான் வழங்கப்படுவதாக கூறி வருகின்றனர். இருப்பினும் அதையும் மீறி இதுபோன்ற சர்ச்சைகள் எழுவதற்கு என்ன காரணம் என்பது தான் கேள்வியாக உள்ளது.
இந்நிலையில் திருச்சி மாவட்டமே திமுகவின் கோட்டை என சொல்லப்படுகின்றது. மேலும் விஜய்க்கு எதிராக போட்டியிடும் திமுகவின் இனிகோ இருதயராஜ் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். விஜய்க்கு தன்னம்பிக்கை இல்லாமல் தான் இரண்டு தொகுதியில் போட்டியிடுகின்றார் என்ற விமர்சனங்களும் ஒருபக்கம் போய்க்கொண்டு இருக்கின்றன.

தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி மறுப்பு… திருச்சி போலீஸ் கெடுபிடி

இவ்வாறு திருச்சி மாவட்டம் திமுகவிற்கு சாதகமாக இருப்பதாக கூறிவரும் நிலையில் அங்கு விஜய் தனது பரப்புரையை செய்ய இருக்கின்றார். எனவே விஜய்யின் திருச்சி பரப்புரை அவரின் வெற்றிவாய்ப்பை உறுதி செய்யும் விதமாக இருக்க வேண்டும் என தவெகவினர் விரும்புகின்றனர். முதலமைச்சர் முக ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் விஜய்யால் நினைத்தவாறு பிரச்சாரம் செய்யமுடியவில்லை என சொல்லப்படுகின்றது. அதனைத்தொடர்ந்து திமுகவின் ஆதிக்கம் நிரம்பிய திருச்சியில் விஜய்யின் பிரச்சாரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. எனவே அவரின் திருச்சி பரப்புரை அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.