தமிழகத்திற்கு வந்திருக்கும் பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் பாஜக வேட்பளர் பட்டியல் தாமதமாகும் என தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெல்லும் எனவும் தெரிவித்தார்” தொடர்ந்து விஜய் குறித்து பியூஷ் கோயலிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு விஜயகாந்த், கமலைப் போலவே விஜய் 5 அல்லது 6 சதவீத வாக்குகளை மட்டுமே பெறுவார் எனவும் தெரிவித்தார்”
பாஜக மையக்குழு கூட்டத்தின் நோக்கம்
தொடர்ந்து பாஜக மையக்குழு கூட்டத்தில் பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வைத்து குறித்து விவாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. பாஜகவிற்கு 27 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது அதிமுக தலைமை. கோவில் நகரங்களை கேட்ட பாஜகவிற்கு பாதியளவு அவர்கள் விரும்பிய தொகுதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆனால் எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த வேட்பாளர்களை பாஜக நிறுத்தப் போகிறது என்ற கேள்விக்கான விடை இன்னமும் கிடைக்கவில்லை. இது குறித்தான ஆலோசனை கூட்டம்நேற்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக மேலிட பொறுப்பாளர்கள் மூலம் நடத்தப்பட்டது.
ஆனால் அந்தக் கூட்டத்திலும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காகவும் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் அவர் இன்றைய தினம் அளித்த பேட்டியில் பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இன்னும் ஓரிரு நாட்கள் கூட எடுக்கலாம் என கூறி இருக்கிறார். ஆனால் பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் மேலும் தாமதம் ஏற்பட்டிருப்பது தோம்நடர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
நான்கு முனை போட்டியில் அனைத்து கட்சிகளும் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தையே மேற்கொள்ள துவங்கிவிட்டனர். தேர்தலுக்கு இன்னும் சொற்ப நாட்களே இருக்கக்கூடிய சூழலில் வேட்பளர்களைக்கூட இருந்து செய்யாத பாஜகவின் இந்த தாமதம் தேர்தலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என சிலர் விமர்சிக்கின்றனர்.
திமுக ஊழல் பட்டியல் வெளியிடு?
பாஜகவின் இந்த மத்தியகுழு கூட்டம் முடிந்த பிறகு திமுக ஊழல் குறித்த பட்டியலை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் தலைமையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட உள்ளதாக தெரிகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் , முன்னாள் மாநில தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை மற்றும் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
பாஜகவின் வியூகம் வேறு?
வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தை விட, திமுகவை தோல்வியடைய செய்ய வேண்டும் என்கிற அஜெண்டா தான் அதிகமாக இருப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றன. உண்மையில் சொல்லப்போனால் பாஜக கடந்த தேர்தல்களில் இருந்த seriousness – ஐ இந்த தேர்தலில் காட்ட தவறி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். சிலர் நயினார் நாகேந்திரன் தலைமைக்கு பிறகு தொய்வு ஏற்பட்டதாக தெரிவித்தாலும் பாஜக தலைமை இதை எப்போதும் அங்கீகரிக்காது என்பதே நிதர்சனம்.
பாஜக அதிமுகவையும் அதன் வாக்கு வங்கியையும் விழுங்கி தன்னை எதிர்க்கட்சியாக நிலை நிறுத்திய பின்பு எதிரணியில் விஜய் வந்தாலோ அல்லது திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வந்தாலோ அவர்களை சரி கட்டிக் கொள்ளலாம் என்ற மனநிலையில் இந்த தேர்தலை கையாளுவதாக சிலர் தெரிவிக்கின்றனர். அதோடு இந்த தேர்தல் களத்தில் பாஜக பார்வையாளராக இருக்கவே விரும்புவதாகவும் அதனால்தான் அவர்கள் தேர்தல் வேலைகளில் மந்தமாக இருப்பதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.
