சென்னை,
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்கள் ஒரே கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுகவை தொடர்ந்து தேமுதிக, மதிமுக, கொமதேக, மமக, ஐயூஎம்எல், உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் மட்டுமே வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது.
தமிழ்நாடு காங்கிரசில் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது. வேட்பாளர்கள் தேர்வில் பணம் விளையாடியதாக எழுந்த தகவலால் ராகுல் காந்தி அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, புதிய வேட்பாளர் பட்டியல் மீண்டும் இறுதி செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டம் இ்ன்று டெல்லியில் நடக்கிறது.
காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் என ஒரு பெரும் படையே டெல்லியில் முகாமிட்டுள்ளனர். தங்கள் ஆதரவு தலைவர்கள் மூலம் வாய்ப்பு கேட்டு மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதனால் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதவில் இழுபறி நீடிக்கிறது.
வேட்பாளர் பட்டியல்:-
ஶ்ரீ பெரும்புதூர் – செல்வபெருந்தகை
கிள்ளியூர் – ராஜேஷ் குமார்
பொன்னேரி – துரை/ இமயா கக்கன் / ரஞ்சன்குமார்
ஊட்டி – கணேஷ்/ நரேஷ் சந்திரன்
ஈரோடு கிழக்கு – மக்கள் ராஜன் / ஈ.வி.கே.எஸ். சஞ்சய்
அறந்தாங்கி – ராமச்சந்திரன்
மயிலாடுதுறை – ராஜ்குமார்
காரைக்குடி – மாங்குடி
சிவகாசி – அசோகன்/ சொக்கர்
திருவாடானை – கரு மாணிக்கம்
திருவைகுண்டம் – ஊர்வசி அமிர்தராஜ்
நாங்குநேரி – காமராஜ்/ ரூபி மனோகரன்
குளச்சல் – பிரின்ஸ்/ லாரன்சு/ பினு லால்
விளவங்கோடு – தாரகை கத்பார்ட்
அம்பை – வி.பி.துரை
ஆத்தூர் – அர்த்தநாரி
வேளச்சேரி – அசன்/ ஹசீனா சையத்
கவுண்டம்பாளையம் – வி.எம்.சி.மனோகர்/ சக்திவேல் கவுண்டர்
சிங்காநல்லூர் – மயூரா ஜெயக்குமார் / சக்திவேல் கவுண்டர்
கடலூர் – பி.வி.ராஜேந்திரன்/ ராதாகிருஷ்ணன
சோளிங்கர் – முனிரத்னம் / பொன்னம்பலம்
பென்னாகரம் – சுமதி அன்பரசு/ தமிழ் குமரன்
கிருஷ்ணகிரி – செல்லக்குமார்
உசிலம்பட்டி – ராஜா முஹம்மது/ கார்த்திகேயன்
மேலூர் – கார்த்திகேயன்/ ரவிச்சந்திரன்
