துப்பாக்கி வைத்திருக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்… 2026 தேர்தலில் வெளியான சுவாரசிய வேட்புமனு! – minister anitha radhakrishnan owning a firearm interesting nomination details revealed in the 2026 elections

திருச்செந்தூர் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தற்காப்பிற்காக ஜெர்மனி பிஸ்டல் வைத்துள்ளார்.

Anitha Radhakrishnan Assets(புகைப்படங்கள்Samayam Tamil)
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியின் திமுக வேட்பாளரும், அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதனுடன் அவர் சமர்ப்பித்துள்ள பிரமாணப் பத்திரத்தில் (Affidavit) தனது சொத்துக்கள் மற்றும் ஆயுத விவரங்களைத் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார்.

சொத்துக்கள் விவரங்கள்

அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின்படி, அவரை விட அவரது மனைவி ஜெயகாந்தியின் பெயரிலேயே அதிகப்படியான சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.அசையும் சொத்து: அனிதா ராதாகிருஷ்ணன் பெயரில் ₹38.19 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், அவரது மனைவி பெயரில் ₹4.80 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும் உள்ளன.
அசையா சொத்து: அமைச்சரின் பெயரில் ₹59.68 லட்சம் மதிப்பிலான நிலம் மற்றும் கட்டிடங்கள் உள்ளன. அவரது மனைவியின் பெயரில் ₹2.85 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன.
தங்க நகைகள்: அமைச்சரிடம் 120 கிராம் தங்கச் செயின் (மதிப்பு ₹17.40 லட்சம்) உள்ளது. அவரது மனைவியிடம் 3,012 கிராம் (சுமார் 376 சவரன்) தங்க நகைகள் உள்ளன, அதன் மதிப்பு ₹4.36 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

ஜெர்மனி நாட்டு பிஸ்டல் (Pistol)

இந்த வேட்புமனுவில் மிகவும் கவனிக்கத்தக்க அம்சமாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தற்காப்பிற்காக ஒரு துப்பாக்கி வைத்திருப்பதை உறுதி செய்துள்ளார். ‘Walther Germany’ நிறுவனத்தைச் சேர்ந்த இந்த பிஸ்டல் சந்தை மதிப்பு சுமார் ₹40,000 ஆகும்.

pistol
pistol

நிலுவையில் உள்ள 3 முக்கிய வழக்குகள்

அமைச்சர் தனது பிரமாணப் பத்திரத்தில் தன் மீது நிலுவையிலுள்ள 3 குற்றவியல் வழக்குகள் குறித்தும் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
கல்வித் தகுதி: இவர் 1969-ம் ஆண்டு வெள்ளாளன்விளை பிஷப் அசிரியா நினைவு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்துள்ளார். திருச்செந்தூர் தொகுதியில் நீண்டகாலமாக வெற்றி பெற்று வரும் அனிதா ராதாகிருஷ்ணன், இம்முறை மீண்டும் அதே தொகுதியில் களம் காண்பது அந்தப் பகுதியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.