ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பவானி அருகே மலையேற்ற பயிற்சிக்காக NCC மாணவர்களுடன் வந்த கல்லூரிப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆர்.டி.ஓ அலுவலக கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்தை ஓட்டுநருக்கு பதில், கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இடிபாடுகளுக்குள் இருந்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
44 மாணவர்கள் பேருந்தில் இருந்த நிலையில் 3 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் காயங்கள் ஏதும் இன்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர். கிரேன் உதவியுடன் தற்போது பேருந்தை மீட்கும் பணியில் போலிசார் ஈடுபட்டனர்.
