2026 ஏப்ரல் 1 அன்று இளஞ்சிவப்பு நிலா வானில் தோன்ற உள்ளது. இது பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அதன் பெயரால் மக்கள் பெரும்பாலும் குழப்பமடைந்து உள்ளனர். இதனை blood moon இரத்த நிலா என்று நினைக்கின்றனர். உண்மையில், இந்த பிங்க் மூன் மற்றும் ரெட் மூன் உள்ளிட்ட இரண்டு நிகழ்வுகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவை. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இரத்த நிலவு நிகழ்வு
இளஞ்சிவப்பு நிலவைப் போலல்லாமல்( blood moon) ‘இரத்த நிலவு’ என்பது முற்றிலும் ஒரு அறிவியல் நிகழ்வாகும். முழு சந்திர கிரகணம் ஏற்படும்போது இது நிகழ்கிறது. இந்த நேரத்தில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருவதால், சூரியனின் கதிர்கள் சந்திரனை நேரடியாகச் சென்றடைவதில்லை. இந்தச் சூழ்நிலையில், சந்திரன் சிவப்பு அல்லது செப்பு நிறத்தில் தோன்றும், இது ‘இரத்த நிலவு’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் காட்சி மிகவும் அரிதானதும் வசீகரிக்கும் தன்மையுடையதாக கருதப்படுகிறது.
நிலவு ரத்த நிறத்தில் தோன்ற காரணம்?
இரத்த நிலவின் போது சந்திரன் சிவப்பாகத் தோன்றுவதற்குக் காரணம் ‘ரேலே சிதறல்’ எனப்படும் ஒரு செயல்முறையாகும். சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் வழியே செல்லும்போது, குறுகிய அலைநீளங்களின் நிறங்கள் சிதறடிக்கப்படுகின்றன.
இதனால் நீண்ட அலைநீளங்களைக் கொண்ட சிவப்புக் கதிர்கள் வளைந்து சந்திரனின் மீது விழும்போது, சந்திரன் சிவப்பாகத் தோன்றுகிறது. இதனால்தான் இரத்த நிலவின் போது சந்திரனின் நிறம் மிகவும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காட்சியளிக்கிறது.
பிங்க் மூன் நிகழ்வு
இளஞ்சிவப்பு நிலா ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் வானில் தோன்றும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 1 அன்று பகல் நேரப்படி இரவு 10:12 மணிக்கு (ஏப்ரல் 2, 2026 அன்று நேரப்படி அதிகாலை 02:11 மணிக்கு தோன்ற உள்ளது.மேலும் இது பெயரளவில் மட்டுமே சிறப்பு வாய்ந்தது. இது பார்ப்பதற்கு ஒரு சாதாரண பௌர்ணமி போலவே இருக்கும். அதேசமயம், இரத்த நிலா ஒரு அரிய நிகழ்வாகும், இது பொதுவாக 1.5 முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை காணப்படுகிறது. சில சமயங்களில் இது ஒரு வருடத்தில் பலமுறை நிகழ்கிறது. இரத்த நிலாவின் காட்சி, குறிப்பாக புகைப்படக் கலைஞர்களுக்கும் வானத்தை விரும்புபவர்களுக்கும் மிகவும் கவர்ச்சிகரமானது.
இளஞ்சிவப்பு வனப்பூக்கள்
வட அமெரிக்காவில் மலர்ந்திருக்கும் இளஞ்சிவப்பு வனப்பூக்கள் (Phlox) அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளது. சந்திரன் முழுமையாக இளஞ்சிவப்பு நிறமாக இல்லை; அது மிதமான ஆரஞ்சு நிறத்தில் தோன்றும். BBC Sky At Night இன் தகவல் படி நிலாவை நோக்கி வரும் சூரிய ஒளி பூமியின் காற்றின் தடுப்பதால் மிதமான ஒளி பரவுகிறது. அதனால் நிலா இந்த வண்ணத்தில் தெரியிறது.
பிங்க் மூன் மற்றும் இரத்த நிலா வேறுப்பாடு என்ன?
இளஞ்சிவப்பு நிலவின் நிகழ்வு என்பது பருவகால மாற்றங்கள் மற்றும் இயற்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட கலாச்சார மரபுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், இரத்த நிலவு என்பது சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவற்றின் துல்லியமான சீரமைப்பை முழுமையாக அடிப்படையாகக் கொண்ட ஒரு அறிவியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. .’பிங்க் மூன்’ மற்றும் ‘பிளட் மூன்’ ஆகிய இரண்டும் சந்திரனின் நிகழ்வுகளே, ஆனால் அவற்றின் அர்த்தமும் அறிவியலும் முற்றிலும் வேறுபட்டவை. ஏப்ரல் 1 அன்று தோன்றும் பிங்க் மூன், ஒரு அழகான பௌர்ணமியாகும்.
