பாமகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்..மருமகளுக்கு எதிராக ராமதாஸ் களமிறக்கிய நபர்- யார்? – ramadoss released pmk second list of candidates has been

2026 சட்டமன்ற தேர்தலுக்காக ராமதாஸ் தலைமையிலான பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பாமகவ் வேட்பாளர் பட்டியல் 2026(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மே 4ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நிலையில் 117 தொகுதிகளை கைப்பற்றினால் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். இதனால் திமுக கூட்டணி கட்சிகளும் அதிமுக கூட்டணி கட்சிகளும், தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டி போட்டு கொண்டு வாக்காளர்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை அள்ளித் தெரித்து வருகிறது. இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம்

தமிழகத்தில் திமுக, அதிமுக ,நாம் தமிழர் ,தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகளிடையே நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த சூழலில் ராமதாஸ் தரப்பு பாமகவும் சசிகலா தொடங்கிய புதிய கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து உள்ளது. 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி மற்றும் சீமான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அடுத்த கட்ட பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?

அந்த வகையில், நேற்று கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் மு.க .ஸ்டாலினும் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயும் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பின்னர் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர்.
இந்த நிலையில் ராமதாஸ் தலைமையிலான பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .இந்த பட்டியலில் மொத்தம் 10 பேர் அடங்கி உள்ளனர். முன்னதாக முதற்கட்டமாக ஐந்து பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வேட்பாளர்கள் விபரங்கள் வெளியாகி உள்ளது.

பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்
  • திருப்போரூர் – ஏகாம்பரம்
  • உத்திரமேரூர் – ஸ்ரீதர்
  • கும்மிடிப்பூண்டி – சங்கர்
  • திருவள்ளூர் – வெங்கடேசன்
  • செஞ்சி – கனல் பெருமாள்
  • தருமபுரி – சரவணன்
  • ஜெயங்கொண்டம் – காடுவெட்டி ரவி
  • செய்யாறு – தி. கா. சீனிவாசன்
  • அந்தியூர் – கோபால்
  • புவனகிரி – பாலமுருகன்
பாமகவின் வன்னியர் ஓட்டு யாருக்கு?

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே ஏற்பட்ட அதிகார மோதல் போக்கு காரணமாக பாமக பிளவுபட்டது. இதனால் அன்புமணி ஒரு தரப்பு பாமகவும், ராமதாஸ் ஒரு தரப்பு அணியாகவும் செயல்பட்டு வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்காக அன்புமணியும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். அதில் பாமகவுக்கு 18 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியல் அன்புமணி வெளியிட்டு இருந்தார்.

அந்த வகையில் தர்மபுரியில் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா போட்டியிட உள்ளார். இதனால் தனது மருமகளான சௌமியாவுக்கு எதிராக ராமதாஸ் சரவணன் என்பவரை போட்டியாளராக களமிறக்கியுள்ளார். இந்த சூழலில், அன்புமணிக்கு ஆதரவாக மாம்பழம் சின்னம் மற்றும் கட்சி உள்ளது. ஆனால் ராமதாஸோ கட்சி என்னுடையது என்று கூறி வருகிறார். இதனால், இந்த தேர்தலில் பாமக வாக்கு யாருக்கு போகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.