Edppadi Palanisamy About Dmk Ministers,அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்த திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவது உறுதி:எடப்பாடி பழனிச்சாமி – edappadi palanisamy allegation on corruption in dmk ministry

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை செய்து வருகின்றார். சிவகாசியில் பரப்புரை செய்து வரும் எடப்பாடி பழனிச்சாமி திமுக அமைச்சர்கள் சிலரின் மீது குற்றம்சாட்டி பேசியிருந்தார். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்த திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

முக்கிய அம்சங்கள்:

ஊழல் செய்த திமுக அமைச்சர்கள்

எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

edappadi palanisamy in sivakasi
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றார். கடந்த வாரம் முதல் தனது பரப்புரையை துவங்கியிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தன் கட்சியின் வேட்பாளர்களுக்காகவும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காகவும் வாக்குகளை சேகரித்து வருகின்றார். அந்த வகையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி சிவகாசியில் பரப்புரை மேற்கொண்டார். சிவகாசி தொகுதியில் வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்காக வாக்குகளை சேகரித்தார் எடப்பாடி பழனிச்சாமி.அப்போது அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஊழல் செய்திருக்கும் திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. சமீபத்தில் அமலாக்கத்துறை நகர்ப்புற வளர்ச்சி துறைகளில் ஊழல் நடந்திருப்பதாக கூறி ஆதாரத்துடன் சட்டஒழுங்கு டிஜிபிக்கு அறிக்கை அனுப்பினார்கள்.
மூன்று முறை அறிக்கை அனுப்பியும் அவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதிமுக சார்பாக உயர்நீதிமன்றத்திற்கு சென்றோம். அவர்கள் விசாரித்து உயர்நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை அனுப்பியிருக்கும் அறிக்கையில் ஆதாரங்கள் உள்ளது. அதனை வைத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த ஒரு விசாரணையையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை, வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த இரு துறைகளில் பல கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. கண்டிப்பாக அதிமுக ஆட்சியமைத்ததும் ஊழல் செய்த அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியாக சொல்லிக்கொள்கிறேன் என்றார் எடப்பாடி பழனிச்சாமி. இதனைத்தொடர்ந்து பேசிய அவர், இரண்டு வருடங்களுக்கு முன்பு திமுகவின் நிதியமைச்சரின் ஒரு ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில் உதயநிதி மற்றும் சபரீசன் ஆகியோர் பலஆயிரம் கோடி ரூபாயை கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் இருப்பதாக அவர் கூறினார்.
அப்படி ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. ஆனால் இதைப்பற்றி முதலமைச்சர் முக ஸ்டாலின் எதுவுமே பேசவில்லை. ஆட்சிக்கு வந்தே இரண்டே வருடங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கும் என மக்கள் தான் நினைத்து பார்க்க வேண்டும். இதையெல்லாம் நாங்கள் சொல்லவில்லை. தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நிதியமைச்சர் தான் ஆடியோவில் கூறியிருந்தார்.
இப்படி ஒரு ஊழல் ஆட்சி தமிழகத்தில் தொடர வேண்டுமா ? இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. இவ்வாறு திமுக அரசு மீது கடும் விமர்சனங்களை முன் வைத்து பரப்புரை செய்து வருகின்றார் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் கடந்த மாதம் நகர்ப்புற வளர்ச்சி துறையில் ஊழல் நடந்திருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் இதுவரை திமுகவழக்கு பதியவில்லை என்பது தான் அவர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகின்றது. இருப்பினும் சம்மந்தப்பட்ட அமைச்சர், நான் எந்த ஒரு ஊழலும் செய்யவில்லை என திட்டவட்டமாக இதனை மறுத்திருக்கிறார்.

அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டவர் தான் செங்கோட்டையன்- EPS கோபியில் பேச்சு!

ஆனால் இதை குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்து குற்றம்சாட்டி பரப்புரை செய்து வருகின்றார். இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் இந்த குற்றச்சாட்டிற்கு திமுக தரப்பு என்ன பதிலளிப்பார்கள் என்பது அவர்களின் பரப்புரையின் போது தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.