கொல்கத்தா,
டி20 உலகக்கோப்பை தொடர் கொழும்புவில் தொடங்கியுள்ளது. இதன் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் -நெதர்லாந்து அணிகள் விளையாடின.இதில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து நடைபெறும் 2வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணியின் கேப்டன் ரிச்சி பெரிங்க்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
