பாஜக வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் உள்ளதா என்ற கேள்விக்கு, அனைத்து தரப்பினரின் பெயர்களும் பட்டியலில் உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்;
வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை?
பாஜக தேசிய தலைமையிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம்பெற்றுள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “அனைத்து தரப்பினரின் பெயர்களும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இளைஞர்கள், மகளிர் உள்ளிட்ட அனைவருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளதால், முழுமையான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.மேலும், வேட்பாளர் அறிவிப்பு குறித்து அவர் கூறியதாவது, பாஜக வேட்பாளர்களை கட்சி இறுதியாக தேர்வு செய்யும் என்றும், இன்னும் இரண்டு நாட்களுக்குள் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இந்த தகவல்களை பகிர்ந்தார்.
