தமிழக வெற்றி கழகம் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா அயனாவரம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தி வாக்கு சேகரித்து வந்தார். பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அருகாமையில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மது பாட்டில் ஒன்று கூட்டத்திற்கு நடுவே ஒரு பெண் மீது விழுந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதில் அந்த பெண்ணிற்கு காயம் ஏற்பட்டது.
உடனடியாக காவல்துறை அங்கு விசாரணை நடத்தி வந்தனர், உடனடியாக மேடை ஏறி “ஆதவ் அர்ஜுனா குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை நான் இங்கிருந்து புறப்பட மாட்டேன், கண்ணாடி துண்டை எறிந்தவரை உடனடியாக கைது செய்ய வேண்டும், என ஆக்ரோஷமாக மேடையில் பேசினார். பொதுக்கூட்டம் நடைபெற்று வரும் பகுதியில் S.J.S என்ற தங்கும் விடுதி அமைந்துள்ளது. இதில் உள்ள ஒரு நபர்தான் கூட்டத்திற்கு நடுவே மது பாட்டிலை வீசினார் என கண்டறிந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தங்கும் விடுதியின் நுழைவாயில் முன்பு 50க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத்தினர் கூடி கூச்சலிட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. இதனால் அயனாவரம் கொன்னூர் சாலையில் சற்று போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
