தவெக உதவியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: மத்திய மந்திரி பரபரப்பு பேட்டி

இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநிலங்களில் தேர்தல் அறிவித்துள்ளது. புதுச்சேரி, அசாமில் தேசிய கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வராது. அங்கு த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்யும் போட்டியிடுகிறார். தேர்த லுக்கு பிறகு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால் த.வெ.க. தலைவர் விஜய்யுடன் பேசி ஆதரவு கேட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

மேற்குவங்கத்தில் மம்தாபானர்ஜியை வீழ்த்திவிட்டு பா.ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும். கேரளத்தில் இப்போது ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந் துவிட்டனர். அங்கும் பா.ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும். அதனால் தேர்தலுக்கு பிறகு 5 மாநிலங்களிலும் தேசிய ஜன நாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்.நாகாலாந்து, மணிப்பூரில் இந்திய குடியரசு கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.

தேசிய அங்கீகாரம் கிடைக்க கட் சியை வலிமைப்படுத்தி வருகிறோம். நாட்டின் வலிமையான பிரதமராக மோடி 3-வது முறையாக பதவியில் இருக்கிறார். நாட்டின் வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Source link