மிகப்பெரிய தருணங்களில் சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறேன்: பெங்களூரு வீரர்

பெங்களூரு,

ஐபிஎல் தொடரில் தொடக்க ஆட்டத்தில் பெங்களுரு அணி, ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த நிலையில்,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் குருணல் பாண்டியா அளித்த ஒரு பேட்டியில், ‘கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் பெங்களூரு அணியில் அமைதியான சூழல் நிலவுவதாக நினைக்கிறேன்.

கடந்த ஆண் டில் நிறைய புதிய வீரர்கள் வருகை தந்ததால், ஒருவரையொருவர் நன்றாக அறிந்து கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் தங்க ளது பங்களிப்பு மற்றும் ஒருவருக்கொருவர் பலம், பலவீனத்தை தெளிவாக புரிந்து கொண் டுள்ளனர். சில சமயம் மிகப் பெரிய தருணங் களில் அதிக நெருக்கடி இருப்பதாக உணர்கிறேன். அந்த மாதிரியான சூழ லில் பொறுமையாக இருந்து, சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறேன். பெங்க ளூரு போன்ற பெரிய அணியின் கேப்டன்ஷிப் பணியை ரஜத் படிதார் அற்பு தமாக செய்கிறார். கடந்த ஆண்டில் அவர் அணியை வழிநடத்திய விதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது’ என்றார்.

Source link