தவெக தலைவர் விஜய்யின் பரப்புரைக்கு தொடர்ந்து பிரச்சனை எழுந்து வருகின்றது. இதனைத்தொடர்ந்து தவெக பரப்புரைக்கு மட்டும் ஏன் பிரச்சனை வருகின்றது என்பது குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேச்சு
முக்கிய அம்சங்கள்:
தவெக பரப்புரைக்கு பிரச்சனை
ஆதவ் அர்ஜுனா விளக்கம்
காவல் துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே தான் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் கொடுத்துள்ளோம் என்றார் ஆதவ் அர்ஜுனா. இந்நிலையில் ஒருபக்கம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்து வருகின்றார். ஆனால் அவரது பிரச்சாரத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் அடுத்தடுத்து பிரச்சனைகள் எழுந்து வருகின்றன.
இதற்கெல்லாம் என்ன காரணம் என்பது தான் தற்போது பேசும்பொருளாக இருக்கின்றது. இதுகுறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவே விளக்கம் கொடுத்திருக்கின்றார். அவர் கூறியது, திமுகவின் முதன்மை எதிரியாக அதிமுக இருக்கின்றது என சொல்கின்றார்கள். அப்படி திமுகவின் முதன்மை எதிரியாக அதிமுக இருந்தது ஜெயலலிதா அவர்களின் காலத்தில் தான். ஜெயலலிதா அம்மாவின் மறைவிற்கு பிறகு அதிமுக திமுகவிற்கு எளிமையான எதிரியாகிவிட்டனர்.
எனவே தான் முதலமைச்சர் முக ஸ்டாலின் தங்களுக்கு எளிமையான எதிரி அதிமுக இருந்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கின்றார். அதனால் தான் எடப்பாடி பழனிச்சாமியின் பரப்புரைக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே தவெக திமுகவிற்கு கடுமையான போட்டியாக இருக்கின்றது. களத்தில் தவெக மற்றும் திமுக தான் இருக்கின்றார்கள். எனவே தான் எங்களின் பரப்புரைக்கு மிகப்பெரிய அளவில் அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.
அதன் காரணமாக தான் பாட்டில் வீசுவது போன்ற ரௌடிசம் வேலைகள் நடந்து வருகின்றது. இதுகுறித்து தான் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளோம் என்றார் ஆதவ் அர்ஜுனா. மேலும் நாங்கள் தலைவர் விஜய்யின் பரப்புரைக்கு ஆட்களை பணம் கொடுத்து அழைத்து வருவதில்லை. தலைவர் விஜய்யை பார்க்க மக்கள் வருகின்றனர். நாங்கள் கூட்டத்தை காட்ட தொண்டர்களை வெவ்வேறு ஊர்களில் இருந்து அழைத்து வருவதில்லை.
அனைவரும் பொதுமக்கள் தான். அவர்களுக்காக பாதுகாப்பு வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை. இதை வலியுறுத்தி தான் போராடிக்கொண்டு வருகின்றோம். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் ஆதவ் அர்ஜுனா. இந்நிலையில் அதிமுக பரப்புரைக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அவர்கள் எந்த ஒரு புகாரும் கொடுக்கவில்லை. ஆனால் தவெக பரப்புரைக்கு ஆரம்பத்தில் இருந்தே பல பிரச்சனைகள் வருகின்றன.
இதற்கெல்லாம் என்ன காரணம் ? என்ற கேள்வி பலரிடம் இருந்து வந்தது. அதற்கு தான் ஆதவ் அர்ஜுனா தற்போது விளக்கம் கொடுத்திருக்கின்றார். இந்த விளக்கம் திமுகவை மட்டுமல்லாமல் அதிமுகவையும் வெகுவாக சீண்டியிருக்கும் என தெரிகின்றது. முக ஸ்டாலினுக்கு எளிமையான எதிரி எடப்பாடி பழனிச்சாமி ஐயா என்பது போல பேசியிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா. அதனால் தான் அவரின் பரப்புரை பிரச்சனை இல்லாமல் போய்க்கொண்டு இருப்பதாகவும் தவெக கடும் போட்டியை தருகின்றது என்பதால் எங்களின் பரப்புரைக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் திமுகவை குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே காவல்துறை உரிய பாதுகாப்பு தர தவருகின்றார்களா ? அல்லது தவெக இன்னும் கட்டுக்கோப்பாக பரப்புரையை நடத்த வேண்டுமா ? என்ற விவாதங்கள் தொடர்ந்து போய்க்கொண்டு தான் வருகின்றது. ஆனால் தவெக தலைவர் விஜய் மக்களை சந்திக்க தயார் நிலையில் இருக்கின்றார் என்பது மட்டும் இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
செங்கோட்டையன் பற்றி கருத்து சொல்ல ஒன்றும் இல்ல- எடப்பாடி பழனிசாமி பேட்டி
அவர் மக்களை சென்று களத்தில் சந்திப்பதே இல்லை என்ற விமர்சனங்கள் இருந்து வருகின்றன. அதற்கெல்லாம் பதில் தரும் வகையில் சென்னையில் சாலை சாலையாக சென்று மக்களை சந்திக்க விஜய் முடிவெடுத்திருப்பதாகவும் அனுமதிக்காக தான் காத்துகொண்டு இருப்பதாகவும் ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
