10 நாட்களில் ரூ.2,500 கோடி வசூல்… திரையுலகை குலுக்கும் சயின்ஸ் பிக்சன் படம்

சென்னை,

ஹாலிவுட்டில் சமீபத்தில் வெளியான அறிவியல் புனைகதை படம் ’பிராஜெக்ட் ஹெயில் மேரி’, உலகளவில் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. வெளியான முதல் 10 நாட்களிலேயே இந்த படம் சுமார் ரூ.2,500 கோடி வசூலை கடந்துள்ளது.

உலகளவில் 20-ம் தேதி வெளியான இந்த படம் 26-ம் தேதி, இந்தியாவில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. 2025-ல் வெளியான ’அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ படத்திற்கு பிறகு, இந்திய ரசிகர்களை இந்த அளவுக்கு கவர்ந்த முதல் சர்வதேச படம் இதுவாகும்.

Also Read
’அனைவருக்கும் சொந்த வீடு, கார்… அதுதான் என் கனவு’ – நிஹாரிகா
10 நாட்களில் ரூ.2,500 கோடி வசூல்... திரையுலகை குலுக்கும் சயின்ஸ் பிக்சன் படம்

இந்த படத்தை பில் லார்டு மற்றும் கிரிஸ்டோபர் மில்லர் இணைந்து இயக்கியுள்ளனர். ஹாலிவுட் நடிகர் ரையன் கோஸ்லிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது தமிழ் ,தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த படம் வெளியாகியுள்ளது.

Source link