காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் பட்டியல் தாமதம் ஏன்? செல்வப்பெருந்தகை ஸ்கெட்சும், அண்ணாமலை தயக்கமும்! – why congress bjp delay candidates list for 2026 tamil nadu assembly election

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் ஏப்ரல் 6 திங்கள். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் இன்னும் இரண்டு (ஏப்ரல் 2, 6) நாட்கள் மட்டுமே இருக்கின்றன. மற்ற நாட்கள் விடுமுறை நாட்களாக அமைந்துவிடுகின்றன. இவ்வளவு குறுகிய கால இடைவெளியை அடைந்த சூழலிலும் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இன்னும் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரிக்கும் போது, பாஜக வட்டாரத்தில் விசாரிக்கும் போது,
  • மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு நெருக்கமான நபர்களுக்கு சீட் வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
  • இந்த பட்டியலில் உள்ள பெயர்களை பார்த்து தேசிய தலைமை அதிருப்தி அடைந்திருக்கிறது.
  • ஒத்துவராத பெயர்களை நீக்கிவிட்டு சரியான நபர்கள் உடன் இறுதி பட்டியலை தயார் செய்வதில் தாமதமாகி வருகிறது.
  • தொகுதிகளை கேட்டு பெற்றதில் பெரிதும் கோட்டை விட்டுள்ளனர். கட்சி பலவீனமாக இருக்கும் தொகுதிகளை பெற்றிருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன.
  • 2026 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்கள் லிஸ்ட் மிகவும் பெரிதாக இருக்கிறது.
  • எனவே எந்த சீட்டை யாருக்கு தருவது என்ற சிக்கல் நிலவுகிறது.
  • தொகுதிக்கு 3 பேரை பரிந்துரை செய்து மேலிடத்திற்கு அனுப்பியுள்ளனர். அதில் அண்ணாமலை பெயரும் இருக்கிறது.
  • இவரை போட்டியிட வைப்பதில் மாநிலத் தலைமையும், தேசிய தலைமையும் ஆர்வம் காட்டுகிறது. ஆனால் அண்ணாமலை தரப்பில் விரைந்து முடிவெடுக்காமல் இருப்பதால் இழுபறி நீடிப்பதாக தகவல்.

விஜய் வந்த பிறகு இது மாறியுள்ளது! உடைத்து பேசிய காங்கிரஸ் எம்.பி!

கட்சிக்கு உழைப்பவருக்கு சீட் இல்லை

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை களத்தில் வேலை செய்பவர்களுக்கு சீட் கொடுப்பது அரிதிலும் அரிதான விஷயமாக தான் பார்க்கப்படுகிறது. ஒன்று, மாநிலத் தலைவருக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். இல்லையெனில் டெல்லி தலைவர்கள் உடன் நெருக்கம் காட்ட வேண்டும். இந்த இரண்டு லாபிக்களை பயன்படுத்தி தான் சீட் பெற்று வருகின்றனர். தற்போதைய சூழலில் டெல்லி காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வரும் நிலையில், ஏப்ரல் 3 அல்லது 4ஆம் தேதி மாலையில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட வாய்ப்பிருக்கிறது.

ராஜ்யசபா சீட்டை கிறிஸ்டோபர் திலக்கிற்கு வழங்கியது பெரிய சர்பரைஸாக இருந்ததை போலவே, சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்களிலும் ஆச்சரியப்படும் வகையிலான நபர்கள், அதாவது புது முகங்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். இந்த விஷயத்தில் ராகுல் காந்தி கூடுதல் கவனம் செலுத்தி பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவை தெற்கு எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற வானதி சீனிவாசன், கடந்த ஓராண்டாகவே கோவை வடக்கு தொகுதியில் வேலைகளை செய்து வருகிறார்.

அண்ணாமலை எடுக்கும் முடிவு

இதன் பின்னணியில் தொகுதி மக்கள் மத்தியில் சில அதிருப்திகரமான சூழல்கள் நிலவுவதாக சொல்லப்படுகிறது. அண்ணாமலையை பொறுத்தவரை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். அந்த தொகுதி கிடைக்காததால் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார். தற்போது தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் அவர்கள் அண்ணாமலையிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 2026 தேர்தலில் நிச்சயம் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு கோவையில் தான் வாய்ப்பை எதிர்பார்த்திருந்ததாக குறிப்பிட்டார். இத்தகைய சூழலில் கோவை வடக்கு தொகுதியில் அண்ணாமலை போட்டியிட தயாராக இருப்பதாக தெரிகிறது. ஆனால் அதை விட்டு தர வானதி சீனிவாசன் தயாராக இல்லை. எனவே திருச்சி தெற்கு, மொடக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட அண்ணாமலைக்கு பியூஷ் கோயல் அறிவுறுத்தியுள்ளார். விரைவாக முடிவெடுத்து தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Source link