தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் திமுக.. வெளியான Lok Poll கருத்துக்கணிப்பு – assembly election 2026 lok poll survey dmk will form government again

சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக, அதிமுக, நாதக கட்சிகள் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையில் தேர்தலுக்கு முன்பான சில கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் Lok Poll நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.

மு.க. ஸ்டாலின் – எடப்பாடி பழனிச்சாமி(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரங்களை அரசியல் கட்சி தலைவர்கள் மும்முரமாக நடத்தி கொண்டிருக்கின்றனர். திமுக மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து தக்க வேண்டுமென்று தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதே போல் அதிமுக இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டுமென போராடி கொண்டிருக்கிறது. இதனிடையில் நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளும் எப்படியாவது ஆட்சியை பிடித்து விடும் என்று நம்பிக்கையுடன் களத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தலுக்கு முந்தையை கருத்துக்கணிப்பு
தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சில கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன. பொதுவாகவே எந்த மாநிலங்களிலும் தேர்தல் நடந்தாலும், இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் எடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக சில சர்வேக்கள் எடுக்கப்பட்டு, அது சம்பந்தமான முடிவுகளும் வெளியாகி அரசியல் களத்தில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது.

லோக்போல் வெளியிட்ட முடிவு
அந்த வகையில் லோக்போல் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு வெளியாகி வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட மொத்தமாக 1.17 லட்சம் பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 500 பேர் என்ற வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த கருத்துக் கணிப்பின்படி திமுக கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலில் 181 முதல் 189 இடங்களை கைபற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மீண்டும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைக்கும் என்று முடிவுகள் வெளியாகியுள்ளது.
அதிமுக வெற்றி பெறும் இடங்கள்
அதே நேரம் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 38 முதல் 42 தொகுகளில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த முறை மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 8 முதல் 10 சீட்டுகளை மட்டுமே வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சீமானின் நாதக கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என லோக்பால் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
மேலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40.10% வாக்குகளையும், அதிமுகவின் என்டிஏ கூட்டணி 29% வாக்குகளையும் பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் தவெக 23 சதவிகிதம் மற்றும் நாதக 4.9% வாக்குகளையும் பெறும் என கூறப்படுகிறது. பரவலாக திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை இல்லை. கலைஞர் உரிமைத்தொகை, காலை உணவுத்திட்டம், விடியல் பயணம் உள்ளிட்ட திட்டங்களால் திமுகவுக்கு அமோகமான ஆதரவு உள்ளது என்பதும் லோக்போல் கருத்துக்கணிப்பு மூலமாக தெரிய வந்துள்ளது.
தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் திமுக ஆட்சி
இந்த முறை சட்டமன்ற தேர்தலில் பலமுனைகளில் போட்டி நிலவி வரும் காரணத்தால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பது ஒரு கருத்தாக உள்ளது. இதன் காரணமாக தொங்கு சட்டசபை உருவாகும் நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லோக்போல் கருத்துக்கணிப்பு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி 181 முதல் 189 இடங்களை கைப்பற்றி தனிப்பெருமான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ளது.
தவெக விஜய்
இதனிடையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி இந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அவரின் வருகை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஆட்சியில் பங்கு என்பதை அறிவித்தும் யாரும் கூட்டணிக்கு வராத நிலையில் தவெக தற்போது 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளது. இதற்காக வேட்பாளர்களை அறிவித்து பரப்புரை பணிகளையும் விஜய் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.