கரூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து பரப்புரை செய்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். அப்போது கரூர் மற்றும் கோவை தொகுதிகள் குறித்து தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி பேசியிருந்தார் முதல்வர் முக ஸ்டாலின்
முக்கிய அம்சங்கள்:
கரூரில் வெற்றிவாய்ப்பு உறுதி
செந்தில் பாலாஜி மீது நம்பிக்கையில் முதல்வர்
இந்நிலையில் செந்தில் பாலாஜி கடந்த முறை கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.கரூரில் செந்தில் பாலாஜியின் செல்வாக்கு குறித்து அனைவருக்கும் தெரியும். ஆனால் இம்முறை அவர் கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பல சர்ச்சைகள் போய்க்கொண்டு இருந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மிகவும் நம்பிக்கையாக பேசினார்.
கரூர் மற்றும் கோவை தொகுதியில் செந்தில் பாலாஜி இருப்பதால் அந்த இரண்டு தொகுதியிலும் வெற்றி உறுதி என சொல்லியிருக்கின்றார். கரூர் செந்தில் பாலாஜியின் பிறந்த வீடு என்றால் கோவை அவரின் புகுந்த வீடு , னவே இரு தொகுதிகளிலும் மகத்தான வெற்றி உறுதி என்றார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
இந்நிலையில் என்னதான் வெளியே செந்தில் பாலாஜி தொகுதி மாறியது குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் உலா வந்துகொண்டு இருந்தாலும் முதலமைச்சர் முக ஸ்டாலின் செந்தில் பாலாஜியின் வெற்றி குறித்து நம்பிக்கையாக உள்ளார் என்றே அவரது பேச்சின் மூலம் தெரிகின்றது. அதுமட்டுமல்லாமல் என்னதான் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டாலும் கரூர் அவருடைய மாவட்டம் என்பதால் அங்கும் வெற்றி வாய்ப்பு உறுதி என்றார் முக ஸ்டாலின்.
மேலும் கரூர் மாவட்டத்தில் 5000 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக பெருமிதம் கொண்டார் முதலமைச்சர். 5000 கோடி மதிப்பிலான திட்டங்களை மட்டும் வழங்காமல் சொல்லாத திட்டங்களையும் செய்து காட்டியிருக்கின்றோம் என பட்டியலிட்டு பேசினார் முக ஸ்டாலின். சொன்னதை மட்டுமல்ல சொல்லாத திட்டங்களையும் செய்து காட்டுபவர் தான் இந்த ஸ்டாலின் என பெருமை கொண்டார் முதலமைச்சர்.
இவ்வாறு கரூர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்குகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சேகரித்தார். அதோடு எதிர்கட்சியினரையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். குறிப்பாக திமுக வாக்குறுதிகளை குறிப்பிட்டு எதிர்கட்சிகளை விமர்சித்தார். திமுக வாக்குறுதிகளை பார்த்து பாஜகவிற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் தூக்கம் கேட்டிருக்கும். திமுக வாக்குறுதிகள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அதை பார்த்து எடப்பாடி பழனிச்சாமி பதட்டமடைந்துள்ளார் என்றார் முக ஸ்டாலின். இவ்வாறு கரூர் தொகுதியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பரப்புரை செய்தார். இந்த பரப்புரையில் செந்தில் பாலாஜி குறித்தான முக ஸ்டாலினின் நம்பிக்கை தான் ஹைலைட்டாக அமைந்தது என மக்கள் சிலர் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
Karur: யாருக்கு வெற்றி? முக்கிய தலைகள் மோதும் களம் – அரசியல் நிலை விவரங்கள்
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி மீதம் கரூர் மற்றும் கோவை தொகுதிகள் மீதும் மிகப்பெரிய நம்பிக்கை இருப்பது அவர் பேச்சை பார்த்தால் தெரிகின்றது. என்னதான் வெற்றிபெறப்போவது உறுதி என பரப்புரையில் பேசுவது வழக்கமாக இருந்தாலும் கரூர் மற்றும் கோவை தொகுதிகளை நினைத்து தனக்கு எந்த பயமும் இல்லை என பதிவு செய்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். இதுவே அவரின் நம்பிக்கையை எடுத்து கூறுவதாக கருத்துக்கள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
