ஜெயலலிதாவை போன்று உடை அணிந்து பிரசாரம் செய்த அ.தி.மு.க. வேட்பாளர்!

கரூர்,

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.

அ.தி.மு.க. சார்பில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் திவ்யா போட்டியிடுகிறார். இந்த நிலையில் திவ்யா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவைப் போன்றே தோற்றமளிக்கும் வகையில் உடை அணிந்து, இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

ஜெயலலிதாவின் தனித்துவமான புடவை கட்டும் விதம் மற்றும் அடையாளங்களை நினைவுபடுத்தும் வகையில் மக்கள் முன் தோன்றிய திவ்யா, வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். பிரசாரத்தின்போது பேசிய திவ்யா, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தின் சாதனைகளை நினைவு கூர்ந்ததுடன், கரூர் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தான் அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்று உறுதி அளித்தார்.

Source link