கிருஷ்ணகிரி: சாலையோர வீட்டின் மீது சாய்ந்த கனரக லாரி – பெண் படுகாயம்

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த தியாகராசனப்பள்ளி பகுதியில், தனியார் தொழிற்சாலைக்கு சரக்கு ஏற்றி சென்ற லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் தாழ்வாக இருந்த வீட்டின் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் வீட்டு சுவர் முழுவதும் இடிந்து வீடு கடுமையாக சேதமடைந்தது.

வீட்டில் இருந்த பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அந்த பகுதியில் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதை கண்டித்து பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Source link