அரசியல் தலைவர்கள் வருகை: புதுச்சேரியில் பள்ளிகள் 4 நாட்கள் விடுமுறை.. சூடுபிடிக்கும் தேர்தல் களம் – puducherry schools to remain closed from april 7 to 10

புதுச்சேரியில் ஏப்.7 முதல் 10 வரை பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பள்ளிகளுக்கு விடுமுறை
​தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கடந்த மார்ச் 15 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த ஐந்து மாநிலங்களில் தேர்தல் ஜனநாயாக முறைப்படி நடக்கும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை மேற்க்கொண்டதாக கூறினார். மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தன்று தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால், பல்வேறு மாநிலங்களில்,சட்டவிரோதமாக கொண்டு வந்த பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் 2026
 புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் 2026

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9ம் தேதி 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது .மேலும் மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் புதுச்சேரியில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

அமித்ஷா பிரச்சாரம்
அமித்ஷா பிரச்சாரம்

அந்த வகையில், என் ஆர் காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் வரும் ஏப்ரல் 4ம் தேதி காரைக்காலில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி புதுச்சேரியிலும் தன்னுடைய பிரச்சாரத்தை தொடர உள்ளார்.

தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 6-ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தந்து திருக்கானூரில் nda கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக பொதுக் கூட்டத்தில் ஆதரவு திரட்ட உள்ளார்.பின்னர் பொதுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
மு.க.ஸ்டாலின்  பிரச்சாரம்

இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் காங்கிரஸ்- திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நீண்ட இழுபறிக்கு பிறகு சுமுகமான முடிவு எட்டப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அன்றைய தினத்தில் தட்டஞ்சாவடியில் ரோடு ஷோ மற்றும் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

பள்ளிக்களுக்கு 4 நாட்கள் விடுமுறை
 பள்ளிக்களுக்கு 4 நாட்கள் விடுமுறை

புதுச்சேரியில் அடுத்தடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் பத்தாம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையே வாக்குப்பதிவில் பயன்படுத்தப்படும் மின்னணு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் தேர்தல் பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகளும் தீவிரமாக வழங்கப்பட்டு வருகின்றன.