தேமுதிகவை உருவாக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் குறித்து ப்யூஷ் கோயல் தவறான கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல்
அந்த வகையில், இதுவரை தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க முடியாத சூழலில் , அதிமுகவை கொண்டு பாஜகவை வளரச்செய்ய வேண்டும் என்று டெல்லி தலைமை வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக ஒராண்டுக்கு முன்பே அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்தது. இதனைத் தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இன்னும் சில தினங்களில் பாஜக வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?
இதற்கிடையே தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் சென்னை வந்தார்.குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு என்ற அறிக்கையை வெளியிட்டார். தமிழ்நாடு கண்டிராத மோசமான ஆட்சி. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ,எம்பி கனிமொழி, சபரீசன் ஆகியோர் இணைந்து நடத்தும் குடும்ப ஆட்சியால் ஏற்பட்ட ஊழல் மற்றும் கொள்ளையால் தமிழகத்தின் மதிப்பு உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று கடுமையாக விமர்சித்தார்.
- தமிழகத்தில் பாலியல் அத்துமீறல்கள் 2022-ல் 1414 ஆக இருந்தது.
- ஆனால் கடந்த 2024 1885 ஆக உயர்ந்துள்ளது.
- அதேபோல் போக்சோ வழக்குகள் கடந்த 202ல் 4 ஆயிரத்து 968 ஆகிறது.
- 2024ல் 1969 ஆக அதிகரித்துள்ளதாக கூறினார்.
விஜயகாந்த் குறித்து பியூஷ் கோயல் சர்ச்சை பேச்சு
இதனைத் தொடர்ந்து பேசியவர் வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விமர்சித்துள்ளார்.தமிழக மக்கள் கலாச்சார மற்றும் அரசியல் குறித்த விஜய்க்கு போதிய புரிதல் இல்லை என தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பல திரை நட்சத்திரங்கள் அரசியலுக்கு வந்தாலும் தமிழக மக்கள் அவர்களை நிராகரித்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் பல தசாப்தங்களாக பொதுப்பணிகள் ஈடுபட்டு அனுபவம் பெற்ற பின்னரே அரசியலுக்கு வந்தனர். தவெக தலைவர் விஜய் மிகுந்த பிரபலம் என்றாலும், அந்த புகழ் அப்படியே வாக்குகளாக மாறாது என்பதற்கு விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் உதாரணங்களை சாட்சி என்று அவர் கூறினார்.
தேமுதிக சுதீஷ் கண்டனம்
விஜய் ஒரு கனவு உலகில் வாழ்வதாகவும், வரவிருக்கும் தேர்தலில் அவரால் மூன்று அல்லது நான்கு தொகுதிகளை கூட வெற்றி பெற முடியாது என்றும் பியூஸ் கோயல் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். இந் த நிலையில்,பியூஷ் கோயலின் இந்த பேச்சுக்கு தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது : தேமுதிகவை உருவாக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் குறித்து ப்யூஷ் கோயல் தவறான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.2014 ஆம் ஆண்டுமுதல் கேப்டனுடன் நட்பாக பழகியவர் ப்யூஸ் கோயல். கேப்டன் மீது நிறைந்த அன்பு கொண்டிருந்த அவரிடம் இருந்து இதுபோன்ற வார்த்தைகளை நான் எதிர்பார்க்கவில்லை .கேப்டன் குறித்த பியூஷ் கோயலின் பேச்சுக்கு கண்டனங்களை பதிவு செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
