புதுச்சேரி: அனுமதிக்கப்பட்ட 4 இடங்களில் 4-ம் தேதி பிரசாரம் செய்கிறார் விஜய்

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டசபை தொகு திகளுக்கு வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி நடைபெற உள் ளது. மே 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

களத்தில் 294 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்கள் தொகுதிவாரியாக சூறாவளியாக சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் நாள் நெருங்கி விட்டதால் முக்கிய தலைவர்கள் புதுவையை நோக்கி வந்து பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.

இந்த நிலையில், புதுச்சேரியில் தவெக மற்றும் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகம் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் விஜய் வருகிற 5-ந் தேதி பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால், போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு நாள் முன்னதாக, அதாவது 4-ந்தேதி (சனிக்கிழமை) பிரசாரம் செய்ய அனுமதித்துள்ளனர்.

கொக்குபார்க் சிக்னல், வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சதுக்கம், சோனாம்பாளையம் சந்திப்பு, கூடப்பாக்கம் ஆகிய 4 இடங்களில் மட்டும் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கி 4 மணி நேரத்திற்குள் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் பேசும் இடங்களில் குழந்தைகள், கர்ப்பிணிகளை அனுமதிக்க கூடாது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ரசிகர்கள் தொண்டர்கள் வரக்கூடாது. அனுமதி கொடுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வேன் மேல் நின்று பேச வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Source link