திருச்சியில் வாகனத்தில் இருந்து திடீரென இறங்கிய விஜய்.. நடந்தது என்ன? முகம் மாறிய போலீஸ்! – tvk leader vijay suddenly steps out of his vehicle in trichy campaign 2026

திருச்சியில் இன்று தவெக தலைவர் விஜய் திடீரென வாகனத்தில் இருந்து இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விஜய் திருச்சி ரோடு ஷோ சம்பவம்(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சி தலைவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதும் என தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனுத்தாக்கல்

அதற்காக ஏற்கெனவே பெரம்பூரில் வேட்புமனுத்தாக்கல் செய்த நிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய, சென்னையில் இருந்து தனி விமான மூலம் விஜய் திருச்சி வந்தார். திருச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு அக்கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையின் இருபுறங்களில் நின்று கொண்டு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து திறந்த பரப்புரை வாகனத்தில் நின்றபடி, தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ சென்றார். அவரை பின்தொடர்ந்து, தவெக தொண்டர்கள் சென்றனர்.

வில்லிவாக்கம் ரியல் போட்டி யாருக்கு இடையில்?

மேலும், விஜய்யின் வருகையொட்டி தவெக கட்சி சார்ப்பில்,விஜய் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக குடிநீர், மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை செய்திகளை அனைத்தும் முறையாக செய்யப்பட்டு தயாராக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்

மேலும் தவெக தலைவர் விஜய் வாகனத்தை யாரும் பின் தொடராமல் இருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. சட்ட ஒழுங்கை பின்பற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பிரச்சார வாகனத்தை பின்தொடர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்கள் நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுவர்கள், கர்ப்பிணி பெண்கள்,முதியவர்கள், பள்ளி மாணவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இருப்பினும் திருச்சியில் விஜய் பரப்புரை செய்யும் பகுதியில் பெண்கள் அதிக அளவில் குழந்தைகளோடு வந்திருக்கின்றனர். அதேபோல் திருச்சி கிழக்கு தொகுதிக்காக வேப்பமனு தாக்களுக்கு செல்லும்போது விஜயின் வாகனத்தை விதைகளை மீறி தொண்டர்கள் பைக்கில் பின்தொடர்கின்றனர். மேலும் தவெக தலைவர் விஜய் சாலை வலம் செல்வதால் திருச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வாகனத்தில் இருந்து திடீரென இறங்கிய விஜய்

இந்த சூழலில் சாலையில் விஜய் ரோடு ஷோ சென்று கொண்டிருந்த போது விஜயை பின்தொடர்ந்து ஸ்கூட்டியில் சென்றபோது இளைஞர் மற்றும் பெண் ஒருவர் பைகில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதனை பார்த்த விஜய் உடனேதிடீரென வாகனத்தில் இருந்து இறங்கினார்.உடனே சாலையில் இறங்கி சென்று நலம் விசாரித்தார். பின்னர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வாகனத்தில் ஏறி மீண்டும் தவெக தலைவர் விஜய் சாலை வலம் வந்தார்.

முன்னதாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த பரப்புரையின் போது விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற கல்லூரி மாணவர் விக்னேஷ் விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த மார்ச் 23 ஆம் தேதி உயிரிழந்தார்.