ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், கட்சி மாறிய செங்கோட்டையனுக்கு வெற்றி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அதிமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.
கோபி தொகுதியில் இரட்டை இலை மலருமா?
இதனால் இரட்டை இலை சின்னமும், செங்கோட்டையனும் என்று இதுவரை வாக்களித்த கோபிசெட்டிப்பாளையம் தொகுதி மக்கள், இனிமேல் விசில் சின்னத்தை தேர்வு செய்வார்களா? செங்கோட்டையனின் வெற்றி தொடருமா?போன்ற கேள்விகள் எழுகின்றன. கட்சிக்கு துரோகம் செய்த செங்கோட்டையனுக்கு எப்படியாவது பாடம் புகட்ட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். இதற்காக வி.பி.பிரபு என்ற வேட்பாளரை களமிறக்கியுள்ளார். மறுபுறம் திமுக சார்பில் என்.நல்லசிவம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வைரல் ஆகும் புகைப்படம் !eps-ajith என்ன சம்மந்தம் ?
ஈபிஎஸ் போட்ட மாஸ்டர் பிளான்
நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். களம் நான்கு முனைப் போட்டியாக இருந்தாலும் செங்கோட்டையனை தோற்கடிக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் இருமுனை போட்டியாக மாறியுள்ளது. இதில் திமுக பலனடையுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. கோபிசெட்டிப்பாளையம் தொகுதியை பொறுத்தவரை கொங்கு வேளாள கவுண்டர்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். இதற்கடுத்து வேட்டுவக் கவுண்டர்கள், பட்டியல் சமூகத்தினர் இருக்கின்றனர். மேலும் முதலியார், செட்டியார், நாடார் சமூகத்தினரும் பரவலாக உள்ளது கவனிக்கத்தக்கது.
செங்கோட்டையன் செல்வாக்கு 2026 தேர்தலில் எடுபடுமா?
இந்நிலையில் 2026 தேர்தல் களம் செங்கோட்டையனின் தவெக இணைவால் புதிதாக மாறியிருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் நலத்திட்டங்களால் காலங்காலமாக இரட்டை இலைக்கு வாக்களித்து வந்துள்ளனர். இதில் செங்கோட்டையன் உள்ளூர் பிரபலமாக இருப்பது தனிப்பட்ட முறையில் பலமாக பார்க்கப்படுகிறது. தொகுதி மக்களுடன் நட்பாக செயல்படக் கூடியவர். ஏதாவது உதவிகள் கேட்டால் செய்து தருவார்.
மக்கள் பிரச்சினைகளை எடுத்து சென்றால் முடிந்தவரை முயற்சிப்பார் என்கின்றனர். ஆனால் தொகுதியில் போதிய வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா? என்ற கேள்வியை பலரும் முன்வைக்கின்றனர். தனிப்பட்ட செல்வாக்கை வைத்து என்ன செய்வது? தொகுதிக்கு என்னென்ன செய்திருக்கிறார் என லிஸ்ட் போடச் சொல்கின்றனர்.
| எண் | தொகுதி பிரச்சினைகள் |
| 1 | குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டு சுற்றுலாவை மேம்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை. |
| 2 | கீரிப்பள்ளம் கால்வாய் தூர்வாரப்படாமல் கழிவுகள் உடன் காணப்படுகிறது. |
| 3 | மஞ்சள் அதிக அளவில் விளைவிக்கப்படும் சூழலில், உரிய விலை கிடைக்காமல் சம்பந்தப்பட்ட விவசாயிகள் வேதனைப்படுகின்றனர். இதனால் பலர் மாற்று பயிர்களை நோக்கி திரும்பி வருகின்றனர். |
| 4 | சர்க்கரை ஆலைகளில் இருந்து கரும்பு விவசாயிகளுக்கு போதிய நிதி விடுவிக்கப்படுவது இல்லை. |
| 5 | பயிர்களை பதப்படுத்தி வைக்கும் வகையில் குளிர்சாதன வசதிகள் இல்லை. சந்தைகள் உடன் எளிதான இணைப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை. |
| 6 | தொழில் போட்டியை சமாளிக்க முடியாமல் கைத்தறி மற்றும் சிறு குறு நிறுவனங்களை நடத்துவோர் தவித்து வருகின்றனர். |
| 7 | பல இடங்களில் சரியான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தரவில்லை. |
| 8 | தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் பெரிதாக இல்லை என்று தொகுதி மக்கள் கவலைப்படுகின்றனர். |
இதுபோன்ற விஷயங்கள் 2026 தேர்தல் களத்தில் எதிரொலிக்கும் என்பதால் செங்கோட்டையனுக்கு சவால் காத்திருக்கிறது.
